கட்டுமல்லி கட்டிவச்சா, வட்ட கருப்பு பொட்டு வச்சா.. விஜய் பாடிய 'வாரிசு' பாடல்

தளபதி விஜய் நடித்த ‘வாரிசு’ படத்தின் சிங்கிள் பாடலான 'ரஞ்சிதமே’ என்ற பாடல் இன்று மாலை 5.30 மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் சற்று முன் இந்த பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகிய இருவரும் கலர்ஃபுல் காஸ்ட்யூம் அணிந்து, பிரம்மாண்டமான அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய செட்டில் படமாக்கப்பட்ட இந்த பாடல் வீடியோ செம ரிச்சாக உள்ளது.

விஜய் மற்றும் எம்எம் மானசி குரலில் உருவாகிய இந்த பாடலை விவேக் எழுதியுள்ளார் என்பதும் தமன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல்முறை இந்த பாடலை கேட்கும்போதே பாடல் ஆட்டம் போட வைக்கும் அளவுக்கு உள்ளது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருவதால் இந்த பாடல் திரையரங்கில் ரசிகர்களை ஆட்டம் போட வைக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

மொத்தத்தில் இந்த பாடல் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை ‘வாரிசு’ திரைப்படம் அதிகரித்துள்ளது என்று குறிப்பிடத்தக்கது. வம்சி இயக்கத்தில், தில் ராஜ் தயாரிப்பில் விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பாடலின் முதல் சில வரிகள் இதோ:

கட்டுமல்லி கட்டிவச்சா, வட்ட கருப்பு பொட்டு வச்சா
சந்திரனில் ரெண்டு வச்சா.. சாரப்பாம்பு இடுப்ப வச்சா
நட்சத்திர தொட்டி வச்சா.. கரும்பு கோடி நெத்தி வச்சா
இஞ்சி வெட்டி கன்னம் வச்சா.. இம்மாத்துண்டு வெட்கம் வச்சா
நெத்தி பொட்டில் என்னை தூக்கி பொட்டு போல வச்சவளே
சுத்துப்பட்டு ஊர பாக்க கண்ணு பட்டு வந்தவளே
தெத்து பல்லு ஓரத்தில உச்சி கொட்டும் நேரத்துல
பட்டுன்னு பத்தியே உச்சகட்டம் தொட்டவளே

ரஞ்சிதமே ரஞ்சிதமே மனசை கலைக்கும் மந்திரமே
ரஞ்சிதமே ரஞ்சிதமே உன்னை உதடு வலிக்க கொஞ்சணுமே

More News

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட த்ரிஷா .. என்ன ஆச்சு?

நடிகை த்ரிஷா திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

என் படத்தில் நீ நடிக்க வேண்டாம்.. நேற்று வெளியான படத்தின் ஹீரோவிடம் கூறிய விஜய்!

'இனிமேல் நீ என் படத்தில் நடிக்க வேண்டாம்' என நேற்று வெளியான படத்தின் ஹீரோவிடம் நடிகர் விஜய் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளன.

லிமிட் தாண்டிருச்சு, வர்றியா, இல்லையா? ரக்சிதாவை செல்லமாக மிரட்டும் ராபர்ட்: க்யூட் வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் டாஸ்க் ஒருபக்கம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் ராபர்ட் மற்றும் ரக்சிதாவின் க்யூட் காட்சிகள் பார்வையாளர்களை ரசிக்க வைத்துக் கொண்டிருக்கின்றது.

என் மகனுடன் டேட்டிங் போறியா? அனு இமானுவேலிடம் கேள்வி கேட்ட ஹீரோவின் தந்தை!

தமிழ், தெலுங்கு திரையுலகில் நடிகைகளில் ஒருவரான அனு இமானுவேலிடம் பிரபல நடிகரின் தந்தை 'என் மகனை காதலிக்கிறாயா? அவருடன் டேட்டிங் செல்கிறாயா? என்று கேட்டதாக வெளி வந்திருக்கும் செய்தி

மைனா நந்தினியின் மாமன் மகனா இந்த பிக்பாஸ் போட்டியாளர்? முன்னாள் மனைவியின் புகைப்படம் வைரல்! 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கும் மைனா நந்தினியின் மாமன் மகனும் இதே நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார் என்ற தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.