'வாரிசு' ஓடிடி ரிலீஸ் எப்போது? அதிகாரபூர்வ அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த 'வாரிசு’ திரைப்படம் பொங்கல் விருந்தாக திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்துள்ளது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் திரையரங்குகளில் மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படம் ஓடிடியில் எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில் தற்போது இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
'வாரிசு’ திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வரும் 22ஆம் தேதி தமிழ் தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகும் என இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன் அறிவித்துள்ளது. அமேசான் பிரைம் இந்தியாவின் ட்விட்டர் பக்கத்திலும் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து வரும் 22 ஆம் தேதி இந்த படத்தை ஓடிடியில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
சமீபத்தில் அஜித் நடித்த ’துணிவு’ திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் விஜய்யின் 'வாரிசு’ திரைப்படமும் ஓடிடியில் வெளியாக உள்ளது.
hold tight because the wait is over!
— prime video IN (@PrimeVideoIN) February 17, 2023
here he comes 🤩#VarisuOnPrime, Feb 22
coming soon in Tamil, Telugu and Malayalam!#Thalapathy @actorvijay @directorvamshi @iamrashmika @MusicThaman @karthikpalanidp pic.twitter.com/AM8xYn44bi
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments