விஜய்யின் 'வாரிசு' அம்மாவுக்கு 64 வயதில் 3வது திருமணமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்த நடிகை ஜெயசுதா மூன்றாவது திருமணம் ரகசியமாக செய்து கொண்டதாக செய்திகள் வெளியான நிலையில் இந்த செய்திக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.
தளபதி விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படத்தில் அம்மா வேடத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தவர் நடிகை ஜெயசுதா. பழம்பெரும் தமிழ் தெலுங்கு நடிகையான இவர் பல திரைப்படங்களில் ஹீரோயினியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் ’சொல்லத்தான் நினைக்கிறேன்’ ’பாரத விலாஸ்’ ’அரங்கேற்றம்’ ’நான் அவன் இல்லை’ ’ஆயிரத்தில் ஒருத்தி’ ’அபூர்வராகங்கள்’ ’மன்னவன் வந்தானடி’ உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் ’பாண்டியன்’ திரைப்படத்தில் ரஜினிக்கு அக்காவாக நடித்தது ஜெயசுதா தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வம்சி இயக்கத்தில் உருவான ’தோழா’ மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’செக்கச்சிவந்த வானம்’ தளபதி விஜய் நடித்த ’வாரிசு’ போன்ற ஒரு சில படங்களில் மட்டுமே கடந்த சில ஆண்டுகளில் அவர் நடித்துள்ளார்.
இந்த நிலையில் 64 வயதான நடிகை ஜெயசுதாவுக்கு சமீபத்தில் மூன்றாவது திருமணம் நடந்ததாக தகவல் வெளியானது. அவருடன் வெளிநாட்டு நபர் ஒருவர் பயணித்து வரும் நிலையில் அவரைத்தான் ஜெயசுதா திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
ஆனால் இது குறித்து ஜெயசுதா விளக்கம் அளித்தபோது தன்னுடன் பயணித்து வரும் அந்த வெளிநாட்டு நபர் தனது வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கும் முயற்சியில் இருக்கும் நபர், அதன் காரணமாக தான் தன்னுடன் அவர் பயணித்து கொண்டிருக்கிறார், மற்றபடி யாரையும் திருமணம் செய்யும் எண்ணம் தனக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே நடிகை ஜெயசுதா ரமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் அதனை அடுத்து அவரை விவாகரத்து செய்துவிட்டு கடந்த 1985 ஆம் ஆண்டு நிதின் கபூர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். நடிகை ஜெயசுதாவுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் என்பதும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் அவர் தனது மகனின் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நடிகை ஜெயசுதா அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். கடந்த 2009ஆம் ஆண்டு செகந்திரபாத் தொகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏவாக தேர்வானார். அதன் பின் அவர் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார். பின்னர் அவர் அந்த கட்சியில் இருந்து வெளியேறி தற்போது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments