ஆடலாமா மாமு.. ஆடலாமா.. கபடி கபடி கபடி.. 'வாரிசு' டெலீட்டட் சீன்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படம் கடந்த பொங்கல் விருந்தாக ஜனவரி 12ஆம் தேதி வெளியானது என்பதும் இந்த படம் 50 நாட்களைக் கடந்தும் இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது என்பதும் தெரிந்ததே. மேலும் இந்த படம் ஓடிட்யிலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று உள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தின் நீளம் காரணமாக குஷ்புவின் காட்சிகள் உட்பட ஒரு சில காட்சிகள் டெலிட் செய்யப்பட்டதாக இயக்குனர் வம்சி தெரிவித்திருந்த நிலையில் தற்போது அமேசான் பிரைம் ட்விட்டர் பக்கத்தில் டெலீட்டட் சீன் ஒன்று வெளியாகியுள்ளது.
இதில் விஜய் மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகிய இருவரது காட்சிகள் உள்ளன. பிரகாஷ்ராஜை அவரது அலுவலகத்தில் பார்க்க வரும் விஜய், முதலில் அமைதியாக பிரகாஷ்ராஜ் பேசுவதை கேட்டு, அதன் பின் அவரது பாணியில் கிண்டலாக வசனம் பேசும் காட்சிகள் இதில் உள்ளன. இந்த காட்சிகளை பார்த்து ரசிகர்கள் ரசித்து வருகின்றனர். ஆனால் ஒரு சிலர் இந்த காட்சிகளை பார்த்தபின் ‘நல்ல வேலை படத்திலிருந்து நீக்கிவிட்டீர்கள்’ என்றும் கமெண்ட் அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ‘வாரிசு’ படத்தின் மேலும் ஒரு சில டெலீட்டட் காட்சிகள் வரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
there you go!
— prime video IN (@PrimeVideoIN) March 3, 2023
an exclusive unseen footage from #VarisuOnPrime to pump up your adrenaline! pic.twitter.com/X6bnCRAUwP
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com