'தளபதி 66': படப்பிடிப்பு தொடங்கும் முன்பே மிகப்பெரிய தொகைக்கு விற்பனையான சாட்டிலைட் உரிமை!
- IndiaGlitz, [Tuesday,October 12 2021]
தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 66’ திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தான் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அந்தப் படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமை ரூபாய் 70 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் திரையுலகைப் பொறுத்தவரை நம்பர் ஒன் வசூல் மன்னன் விஜய் தான் என திரையுலக வட்டாரங்கள் கூறிவரும் நிலையில் அவரது ’பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ’தளபதி 66’ படத்தை வம்சி இயக்க இருப்பதாகவும் தில் ராஜூ தயாரிக்க இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது. விஜய் ஜோடியாக இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் அது மட்டுமின்றி தமிழ் தெலுங்கு திரையுலக பிரபலங்களும் இந்த படத்தில் இணைவார்கள் என்று கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ’தளபதி 66’ படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரூபாய் 70 கோடிக்கு வாங்கி உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே விஜய்யின் ’மாஸ்டர்’ மற்றும் ’பிகில்’ திரைப்படங்கள் 50 கோடிக்கு மேல் சாட்டிலைட் உரிமை விற்பனையாகிய நிலையில் ’தளபதி 66’ படம் இதுவரை தமிழ் திரையுலக வரலாற்றில் இல்லாத வகையில் சாட்டிலைட் உரிமை மட்டுமே 70 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளதாக கூறப்படுவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.