விஜய்யின் 'தளபதி 66' படத்தை இயக்குவது தேசிங்கு பெரியசாமியா? வம்சியா?

  • IndiaGlitz, [Thursday,August 19 2021]

தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 66’ திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க இருப்பதாகவும், பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தது. ஆனால் இந்த செய்தியில் திடீரென மாற்றம் ஏற்பட்டு, வம்சி இயக்கத்தில் தில் ராஜ் தயாரிப்பில் நடிப்பதற்கு விஜய் இன்னும் முழுமையாக ஒப்புக் கொள்ளவில்லை என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் திடீரென ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குனர் தேசிங்கு பெரியசாமி விஜய்க்கு ஒரு கதை சொல்லி இருப்பதாகவும், அவர் தான் விஜய் 66 வது படத்தை இயக்கப் போவதாகவும் ஒருசில ஊடகங்களில் தகவல்கள் வந்தன.

இந்த நிலையில் தற்போது நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வெளி வந்த தகவலின்படி தளபதி விஜய்யின் 66வது படத்தை இயக்கப்போவது வம்சி தான் என்றும் இந்த படத்தை தயாரிக்க இருப்பது தில் ராஜூ தான் என்பதும் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதால் இந்த படத்தின் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் தென்னிந்திய நடிகர்கள் யாரும் வாங்காத சம்பளத்தை விஜய் வாங்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

விஜய்யின் 67வது திரைப்படத்தை தான் தேசிங்கு பெரியசாமி இயக்க இருப்பதாகவும் அதற்குள் அவர் ரஜினியின் திரைப்படத்தை இயக்கி முடித்து விட்டு வந்து விடுவார் என்றும் கூறப்படுகிறது. எனவே ’தளபதி 66’ படத்தை இயக்குவது வம்சி தான் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.