தளபதி விஜய்யின் 'பீஸ்ட்': சூப்பர் அப்டேட்டை அறிவித்த சன்பிக்சர்ஸ்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த திரைப்படம் ‘பீஸ்ட்’ . இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று ஏழு மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்த நிலையில் சற்று முன்னர் அந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த அறிவிப்பில் தளபதி விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பீஸ்ட் செகண்ட் சிங்கிள் பாடல் வரும் 19ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த புரமோ வீடியோவில் விஜய், அனிருத் மற்றும் நெல்சன் டான்ஸ் ஆடும் காட்சிகள் உள்ளதை அடுத்து இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
ஏற்கனவே ‘பீஸ்ட்’ படத்தில் இடம்பெற்ற முதல் பாடலான அரபிக்குத்து பாடல் இன்னும் இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் தற்போது இந்த பாடலும் அதனுடன் இணைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Jolly ah irunga Nanba! ??#BeastSecondSingle - #JollyOGymkhana sung by Thalapathy @actorvijay is releasing on March 19th!@Nelsondilpkumar @anirudhofficial @kukarthik1 @hegdepooja @manojdft @AlwaysJani #Beast #BeastUpdate pic.twitter.com/1C6JcDTi9Q
— Sun Pictures (@sunpictures) March 16, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments