சமூக வலைத்தளங்களில் திடீரென டிரெண்டான தளபதியின் 'சர்கார்'

  • IndiaGlitz, [Monday,October 19 2020]

தளபதி விஜய் நடிப்பில், இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கிய ‘சர்கார்’திரைப்படம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படம் குறித்த ஹேஷ்டேக் ஒன்று திடீரென டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இன்று காலை முதல் ட்ரெண்டாகி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ஆம் தேதி அதாவது இரண்டு வருடங்களுக்கு முன் இதே நாளில் தான் ‘சர்கார்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

‘சர்கார்’ படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகி இரண்டு வருடம் நிறைவடைந்ததை அடுத்து தற்போது இந்த படத்தின் ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தளபதி விஜய்யின் ‘சர்கார்’திரைப்படத்தின் டிரைலர் மிகப்பெரிய அளவில் சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்றது என்பதும் இந்திய திரையுலகில் யூடியூபில் அதிக லைக்குகள் பெற்று சாதனை செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

யூடிபில் சாதனை செய்த ‘சர்கார்’ படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆன தினத்தை இன்று விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.