close
Choose your channels

விஜய்யின் 'தளபதி 69' படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் யார்? கசிந்த தகவல்..!

Thursday, January 25, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் தற்போது ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும், ‘கோட்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார் என்பது தெரிந்ததே.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விஜய் நடிக்க இருக்கும் அடுத்த படம் குறித்த தகவல்கள் தற்போது கசிந்துள்ளது. விஜய் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ’தளபதி 69’ திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் விஜய் நடிக்கும் படத்தை முதன்முதலாக கார்த்திக் சுப்புராஜ் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனுஷ், விக்ரம், போன்ற பிரபலங்களின் படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ் அடுத்ததாக தளபதி விஜய்யையும் இயக்க உள்ளார் என்பதும் இந்த படமும் அவரது ஸ்டைலில் வித்தியாசமான திரைக்கதையில் அமைந்திருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment