தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' ரன்னிங் டைம் இவ்வளவா? ரொம்ப நீளமாயிருக்கே!

தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆவது கிட்டத்தட்ட உறுதி என்ற தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. மேலும் இந்த படத்தின் மாஸ் அப்டேட் இன்று மதியம் 12.30 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழுவினர் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று வெளியாகும் அந்த அறிவிப்பு ‘மாஸ்டர்’ படத்தின் டிரைலர் வெளியீடு தேதி அல்லது ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் சமீபத்தில் ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் சென்சார் பணிகள் முடிந்தது என்றும் இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ’யூஏ’ சான்றிதழ் அளித்தனர் என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் தற்போது ‘மாஸ்டர்’ படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் வந்துள்ளது

இந்த படத்தின் ரன்னிங் டைம் 178 நிமிடங்கள் என்று கூறப்படுகிறது. அதாவது கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் இந்த படம் ரன்னிங் டைம் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில வருடங்களாகவே இரண்டு அல்லது இரண்டரை மணி நேரத்திற்குள் அனைத்து படங்களும் முடிவடையும் நிலையில் 3 மணி நேரம் என்பது கொஞ்சம் நீளம் அதிகமாக இருக்கின்றதே என்று சினிமா ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

இருப்பினும் விஜய், விஜய்சேதுபதி மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் இணைந்து விறுவிறுப்பான படத்தை கொடுத்திருப்பார்கள் என்றும், அதனால் 3 மணி நேரம் என்பது படத்திற்கு குறையாக இருக்காது என்றும் விஜய் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
 

More News

மாஸ் நடிகருக்கு கொரோனா பாசிட்டிவ்: ரசிகர்கள் அதிர்ச்சி

தென்னிந்திய திரையுலகின் மாஸ் நடிகர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பிரபல தமிழ் ஹீரோ மகள் திருமணம்: வைரலாகும் புகைப்படங்கள்!

கே பாலச்சந்தர் இயக்கிய 'மனதில் உறுதி வேண்டும்' என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் 'உன்னாள் முடியும் தம்பி' 'டூயட்' உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் ரமேஷ் அரவிந்த்.

ஆரி விளையாட்டாய் சொன்னது நிஜமாவே நடந்துருச்சே: சோம் வீட்டில் நடந்த துயரம்!

பிக்பாஸ் வீட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன் 'எந்திரன்' என்ற டாஸ்க் வைக்கப்பட்டபோது, சோம்சேகரை கோபப்படுத்த ஆரி பேசியபோது, 'நீ உன்னுடைய பிரியத்திற்குரிய குட்டுவை விட்டுவிட்டு

விமர்சனங்களைத் துச்சமாக மதித்து வெற்றிக்கொடி… சூறாவளி பிரச்சாரத்தில் தமிழக முதல்வர்!!!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாதத்திற்கும் குறைவாகவே உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் சூடுபிடித்து உள்ளது

சத்தமில்லாமல் ஒரு சாதனை… கொரோனா நேரத்திலும் வியக்க வைத்த தமிழக முதலீடுகள்!!!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தாக்கத்தால் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டு உலகமே அரண்டு கிடந்தது.