அதுக்குள்ள காலேஜ் போறியா.. 'மாஸ்டர்' குழந்தை நட்சத்திரத்தை பார்த்து கேட்ட கேள்வி..!

  • IndiaGlitz, [Friday,June 30 2023]

கடந்த 2019 ஆம் ஆண்டு தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக ‘உண்டியல்’ என்ற கேரக்டரில் நடித்திருந்த சூப்பர் சிங்கர் பிரபலம் பூவையார் தற்போது கல்லூரிக்கு செல்வதாக தெரிவித்த வீடியோ வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாகி உள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு சூப்பர் சிங்கர் ஜூனியர் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் பூவையார் என்பதும் இவர் அந்த நிகழ்ச்சியில் அவர் இரண்டாவது ரன்னர் அப் நிலையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானதை அடுத்து அவர் திரைப்படங்களிலும் ஒரு சில பாடல்களை பாடினார். குறிப்பாக ’பிகில்’ திரைப்படத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து ’வெறித்தனம்’ என்ற பாடலை பாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜய் டிவியின் ட்விட்டர் பக்கத்தில் சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் இந்த ஆண்டு கல்லூரி செல்வதாக பூவையார் கூறியுள்ளார். இதை கேட்ட தொகுப்பாளர்கள் மாகாபா மற்றும் குரேஷி ஆச்சரியம் அடைந்தனர். இப்ப தான் உன்னை ‘மாஸ்டர்’ படத்துல சின்னப்பையனா பார்த்தேன், அதுக்குள்ள காலேஜ் போறியா? என்று ஆச்சரியத்துடன் கேட்கும் காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளது.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்களும் பூவையார் அதுக்குள்ள கல்லூரிக்கு செல்கிறாரா என்று ஆச்சரியத்துடன் கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.

More News

'மாமன்னன்' முதல் நாள் வசூல் இவ்வளவா? ஹாட்ரிக் வெற்றி பெற்ற மாரி செல்வராஜ்..!

மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்த 'மாமன்னன்' திரைப்படம் நேற்று வெளியான நிலையில் இந்த படத்திற்கு ஊடகங்கள் மற்றும் யூடியூப் விமர்சகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்

உங்களுக்கு வயசு ஆகுமா? ஆகாதா? மேக்கப் இல்லாத நதியா போட்டோஷூட்டுக்கு குவியும் கமெண்ட்ஸ்..!

நடிகை நதியா நேற்று பக்ரீத் பண்டிகையை கொண்டாடிய நிலையில் மேக்கப் இல்லாமல் சிவப்பு நிற உடையில் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்திருக்கும் நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கமெண்ட்களை

அந்த நடிகை கிட்ட பேசணும்.. மஞ்சுவாரியரிடம் கோரிக்கை வைத்த அஜித்..!

13 வருடங்களுக்கு முன்பு தன்னுடன் நடித்த நடிகை உடன் தான் பேச வேண்டும் என்று மஞ்சு வாரியரிடம் 'துணிவு' படப்பிடிப்பின் போது அஜித் கேட்டதாக பிரபல நடிகை சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். 

18 வயதில் பைலட்-ஆன சிறுமி… யார் இந்த சாக்ஷி கோச்சார்?

இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயது சிறுமி ஒருவர் வணிக ரீதியாக பயணிக்கும் விமானத்திற்கு ஓட்டுநர் உரிமத்தைப் பெற்று இந்தியாவின் இளமையான பைலட் எனும் பெயருக்குச் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார்.

Toilet-இல் ஸ்மார்ட் போன்கள்? கழிவறை இருக்கையைவிட மோசம்… அச்சுறுத்தும் புது ஆய்வு!

கழிவறைக்கு செல்லும்போது செல்போன்களை எடுத்துச்செல்லும் பழக்கம் இன்றைக்கு பெரும்பாலானோரிடம் அதிகரித்து இருக்கும் நிலையில் அவை கழிப்பறை இருக்கைகளைவிட பத்து மடங்கு அதிகமான கிருமிகளை,,,