தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' சென்சார் தகவல்கள்!

  • IndiaGlitz, [Thursday,December 17 2020]

தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதியே வெளியாக இருந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் இந்த படத்தை வரும் பொங்கல் தினத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பதும் தமிழகத்தில் மட்டும் 1000 திரையரங்குகளில் பொங்கல் தினத்தில் இந்த படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நேற்று ‘மாஸ்டர்’ திரைப்படத்தை சென்சார் அதிகாரிகள் பார்த்ததாகவும் ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் சென்சார் சர்டிபிகேட் விரைவில் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளிவந்தன. இதனை அடுத்து சற்று முன் வெளியான தகவலின்படி ‘மாஸ்டர்’ திரைப்படத்திற்கு ’யுஏ’ சான்றிதழ் கிடைத்து இருப்பதாக தெரிகிறது. இதனை அடுத்து விஜய் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்

‘மாஸ்டர்’ திரைப்படம் சென்சார் செய்யப்பட்டுள்ளதை அடுத்து அந்த படம் தியேட்டரில் தான் ரிலீஸாகும் என்பது 100% உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தளபதி விஜய்யுடன் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது