'முதல் நாளில் இத்தனை கோடி வசூல் செய்ததா மாஸ்டர்? ஆச்சரியத்தில் திரையுலகம்!

  • IndiaGlitz, [Thursday,January 14 2021]

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் நேற்று தமிழகம் உள்பட உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியானது என்பது தெரிந்ததே. இந்த திரைப்படத்திற்கு பெரும்பாலும் பாசிட்டிவ் விமர்சனங்களும் ஒரு சில கலவையான விமர்சனங்கள் வெளி வந்தது என்பதும் இருப்பினும் இந்த படத்தின் வசூல் பிரமிக்கத்தக்க வகையில் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ’மாஸ்டர்’ திரைப்படம் நேற்று ஒரே நாளில் 50 முதல் 55 கோடி வரை உலகம் முழுவதும் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. சென்னையில் மட்டும் இந்த படம் 1.21 கோடி வசூல் செய்துள்ளதாகவும் ஆந்திராவில் 9 கோடியும், கர்நாடகா மற்றும் கேரளாவில் ஆறு கோடியும் வெளிநாடுகளில் 14 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் இந்த படம் சுமார் 25 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

50% இருக்கைகள் மற்றும் கொரோனா வைரஸ் காரணமாக விதிக்கப்பட்ட கெடுபிடிகளையும் தாண்டி ’மாஸ்டர்’ திரைப்படம் 55 கோடி வசூல் செய்திருப்பது திரையுலக வட்டாரங்களில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது
 

More News

நீ எப்படிடா இப்படி வளந்த..? ஆரிக்கு கேள்வி எழுப்பிய பிரபலம்!

ஆரியின் வளர்ப்பு சரியில்லை என்று கூறிய ஒரே ஒரு வார்த்தையால் தான் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டார் என்பது தெரிந்ததே.

பிக்பாஸ் வீட்டிற்கு வருகிறாரா சுரேஷ் தாத்தா? பரபரப்பு தகவல்!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடைசி வாரமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை முதல் எவிக்ட்டான போட்டியாளர்கள் சிறப்பு விருந்தினராக வந்து கொண்டிருக்கின்றார்கள்

பிக்பாஸ் ஷிவானியின் பொங்கல் ஸ்பெஷல்:வைரல் புகைப்படங்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ஷிவானி நாராயணன் கடந்த ஞாயிறன்று சிங்கப்பெண்ணாக வெளியே சென்றார் என்பது தெரிந்ததும் அவர் இருந்த 95 நாட்களில் கடைசி வாரம்

பைக்கில் ஒன்றாக ஊர் சுற்றிய காதலனை பின்னால் இருந்தே கத்தியால் குத்திய காதலி… அதிர்ச்சி சம்பவம்!!!

ஆந்திர மாநிலத்தில் காதலுடன் பைக்கில் சென்ற காதலி ஒருவர் பின்னால் இருந்தே கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏற்கனவே கொரோனா தாக்கி இருந்தால் தடுப்பூசி போட வேண்டாமா? நிபுணர்கள் கூறுவது என்ன?

இந்தியாவில் வரும் 16 ஆம் தேதி முதல் தடுப்பூசி போடும் நடைமுறை அமலுக்கு வருகிறது.