'முதல் நாளில் இத்தனை கோடி வசூல் செய்ததா மாஸ்டர்? ஆச்சரியத்தில் திரையுலகம்!

  • IndiaGlitz, [Thursday,January 14 2021]

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் நேற்று தமிழகம் உள்பட உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியானது என்பது தெரிந்ததே. இந்த திரைப்படத்திற்கு பெரும்பாலும் பாசிட்டிவ் விமர்சனங்களும் ஒரு சில கலவையான விமர்சனங்கள் வெளி வந்தது என்பதும் இருப்பினும் இந்த படத்தின் வசூல் பிரமிக்கத்தக்க வகையில் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ’மாஸ்டர்’ திரைப்படம் நேற்று ஒரே நாளில் 50 முதல் 55 கோடி வரை உலகம் முழுவதும் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. சென்னையில் மட்டும் இந்த படம் 1.21 கோடி வசூல் செய்துள்ளதாகவும் ஆந்திராவில் 9 கோடியும், கர்நாடகா மற்றும் கேரளாவில் ஆறு கோடியும் வெளிநாடுகளில் 14 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் இந்த படம் சுமார் 25 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

50% இருக்கைகள் மற்றும் கொரோனா வைரஸ் காரணமாக விதிக்கப்பட்ட கெடுபிடிகளையும் தாண்டி ’மாஸ்டர்’ திரைப்படம் 55 கோடி வசூல் செய்திருப்பது திரையுலக வட்டாரங்களில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது