எப்படி எங்க சர்ப்ரைஸ்? விஜய்-விஜய்சேதுபதி மோதும் அட்டகாசமான போஸ்டர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் வரும் 13ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தயாரிப்பு நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் தினமும் ஒரு புரமோ வீடியோ வெளிவந்து அட்டகாசமாக வைரலாகி வருகிறது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் இன்று மாலை ’மாஸ்டர்’ திரைப்படத்தின் அட்டகாசமான போஸ்டர் ஒன்று வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சற்றுமுன்னர் முன்னர் எப்படி எங்க சர்ப்ரைஸ்? என்ற கேப்ஷனுடன் வெளியாகியிருக்கும் இந்த போஸ்டரில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆக்ரோஷமாக மோதும் ஸ்டில் உள்ளது. பார்ப்பதற்கு செம ஆக்சன் ஆக இருக்கும் இந்த காட்சியை திரையில் பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைப்பில் உருவாகியிருக்கும் இந்த படம் 2021 ஆம் ஆண்டின் முதல் மிகப்பெரிய வெற்றி படமாக இருக்கும் என்பது உறுதி
Here's the #Master treat to set your screens on ??
— XB Film Creators (@XBFilmCreators) January 11, 2021
Epidi yengaloda surprise? ??#MasterPongal@actorvijay @VijaySethuOffl pic.twitter.com/x6E7peUzMg
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments