எப்படி எங்க சர்ப்ரைஸ்? விஜய்-விஜய்சேதுபதி மோதும் அட்டகாசமான போஸ்டர்!

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் வரும் 13ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தயாரிப்பு நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் தினமும் ஒரு புரமோ வீடியோ வெளிவந்து அட்டகாசமாக வைரலாகி வருகிறது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இன்று மாலை ’மாஸ்டர்’ திரைப்படத்தின் அட்டகாசமான போஸ்டர் ஒன்று வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சற்றுமுன்னர் முன்னர் எப்படி எங்க சர்ப்ரைஸ்? என்ற கேப்ஷனுடன் வெளியாகியிருக்கும் இந்த போஸ்டரில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆக்ரோஷமாக மோதும் ஸ்டில் உள்ளது. பார்ப்பதற்கு செம ஆக்சன் ஆக இருக்கும் இந்த காட்சியை திரையில் பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைப்பில் உருவாகியிருக்கும் இந்த படம் 2021 ஆம் ஆண்டின் முதல் மிகப்பெரிய வெற்றி படமாக இருக்கும் என்பது உறுதி

More News

தமிழில் பேசி ஆஸ்திரேலியாவின் கனவை கலைத்த அஸ்வின்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று முடிந்த மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தது. இந்த போட்டியில் 407 ரன்கள் எடுத்தால்

விராத்-அனுஷ்கா தம்பதிக்கு பிறந்த தேவதை: ரசிகர்கள் வாழ்த்து!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி, பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவை திருமணம் செய்து கொண்டார் என்பதும் அனுஷ்கா கடந்த சில மாதங்களாக கர்ப்பமாக இருந்தார் என்பதும் தெரிந்ததே 

'டிக்கெட் டு ஃபினாலே' டாஸ்க் குறித்து ஆரி ஸ்பீச்: அதிர்ச்சியில் சோம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் 'டிக்கெட் டு ஃபினாலே' என்ற டாஸ்க் நடைபெற்றது என்பதும் இந்த டாஸ்க்கில் மிகச் சிறப்பாக விளையாடி அதிக புள்ளிகள் பெற்று சோம் வெற்றி பெற்றார்

பிக்பாஸ் வரலாற்றிலேயே அமைதியாக ஆரி செய்த சாதனை!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரி தான் டைட்டில் வின்னர் என கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும் முறையான அறிவிப்பு மட்டுமே அறிவிக்கப்பட வேண்டிய நிலை இருப்பதாகவும் அவரது ரசிகர்கள் மிகவும்

தண்ணீரைவிட பெட்ரோல், டீசல் அவ்வளவு விலை மலிவா? உலகையே கலக்கும் சில நாடுகள்!!!

உலகம் முழுவதும் சர்ச்சைக்குரிய ஒரு விஷயமாக எரிபொருள் விற்பனை இருந்து வருகிறது. எரிபொருள் தட்டுப்பாட்டை குறைப்பதற்காகத்தான் SAARC போன்ற அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.