அதுக்கு மேல் உண்மைய சொல்லணும்னா, லியோ தான் உயிரோடு வந்து சொல்லணும்: 'லியோ' டிரைலர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ‘லியோ’ திரைப்படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது
இந்த ட்ரெய்லரின் ஆரம்பத்தில் ’சீரியல் கில்லர் கண்மூடித்தனமா எல்லோரையும் சுட்றான், ஏற்கனவே நிறைய பேர் ரோட்டில் செத்து கிடக்குறாங்க.. அப்படி இருந்தும் பார்க்கிற எல்லோரையும் சுட்றான், அப்போ ஒரு துணிச்சலான போலீஸ் ஆபீஸர் சிங்கம் மாதிரி வந்து சீரியல் கில்லரை திருப்பி சுட்றான், போலீஸ் ஆபீஸர் துப்பாக்கிய லோடு செய்கிற அந்த கேப்ல அந்த போலீஸ் ஆபீஸரோட துப்பாக்கியை பிடுங்கிட்றான், இப்போ உன் கையில அந்த துப்பாக்கி.. நீ என்ன பண்ணுவ’ என்ற விஜய்யின் அட்டகாசமான டயலாக் உடன் இந்த டிரைலர் ஆரம்பமாகிறது.
அவன் இந்த ஊரை ஏமாற்றலாம், உலகத்தை ஏமாற்றலாம், ஆனால் என்னை ஏமாற்ற முடியாது என்ற சஞ்சய் தத்தின் ஆவேசமான வசனமும் இந்த ட்ரெய்லரில் உள்ளது.
’இவனுங்க நிறுத்த போறது இல்ல, ஈசல் கூட்டம் மாதிரி உன்னை தேடி வந்துகிட்டே தான் இருப்பாங்க, நீ இங்கே இருக்க கூடாது, நீ இங்கே இருக்க இருக்க உனக்கு தான் ஆபத்து’ என்ற கௌதம் மேனன் வசனம் இந்த ட்ரைலரில் இடம்பெற்று உள்ளது
இனிமேல் நாம வாழ்க்கை முழுவதும் இப்படித்தான் இருக்க போகுதா, ஓடணும், பயந்து பயந்து சாகனும், இப்படித்தான் நம்ம வாழ்க்கையா என்ற த்ரிஷாவின் வசனம் உள்ளது
இதை அடுத்த வைக்கிற விஜய் ஆவேசமாக எதிரிகளை துவம்சம் செய்யும் காட்சிகள் அதிரடி ஆக்சன் காட்சிகள் உள்ளது. ’என் குடும்பத்து மேல ஏண்டா கை வைக்கிறீங்க என்று விஜய் ஆவேசமாக வில்லங்கங்களை அடித்து நொறுக்கும் காட்சி இதுவரை தமிழ் சினிமாவில் பார்த்திராத வகையில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளாக உள்ளது.
எவனோ ஒரு தேவடியா பையன் என்ன மாதிரி இருக்கிறான் என்கிறதுக்காக, என்ன போட்டு உயிரை எடுத்தால், நான் என்னடி பண்ணுவேன் என்று விஜய் பேசும் வசனத்தில் இருந்த இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருப்பாரோ என்று எண்ணம் ஏற்படுகிறது.
மொத்தத்தில் சுமார் மூன்று நிமிடங்களுக்கு உள்ள இந்த டிரெய்லரில், விஜய், சஞ்சய் தத், அர்ஜுன் ஆகியோர்களின் ஆக்சன் காட்சிகள், அனிருத்தின் பின்னணி இசை, லோகேஷின் அபாரமான இயக்கம் என ஒரு ஆக்ஷன் விருந்தை இந்த டிரைலர் அளித்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments