ஆடியோ விழாவை அடுத்து 'லியோ' டிரைலர் வெளியீட்டுக்கு சிக்கலா? விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி..!

  • IndiaGlitz, [Wednesday,October 04 2023]

தளபதி விஜய் நடித்த ‘லியோ’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற இருந்த நிலையில் ஒரு சில காரணங்களால் திடீரென இந்த விழா நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது ‘லியோ’ ட்ரெய்லர் வெளியீட்டில் சிக்கல் எழுந்துள்ளதாக கூறப்படுவதால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

நாளை விஜய் நடித்த ‘லியோ’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாக உள்ளது. விஜய் படங்களின் டிரைலர் வெளியாகும் போது சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் வாகன நிறுத்தத்தில் திரை அமைத்து ட்ரெய்லர் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ’

அந்த வகையில் நாளை சென்னை கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் வாகன நிறுத்தம் பகுதியில் ‘லியோ’ ட்ரெய்லர் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக கோயம்பேடு காவல் நிலைய காவல் துறையினரை அணுகி அனுமதி கேட்கப்பட்டதாகவும் ஆனால் காவல் ஆணையரை அணுகுமாறு படக்குழுவுக்கு கோயம்பேடு காவல்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

எனவே காவல் ஆணையரை அணுகி ‘லியோ’ திரைப்படத்தின் டிரைலரை கோயம்பேடு ரோகிணி திரையரங்கின் வாகன நிறுத்தத்தில் திரையிட ஏற்பாடு செய்யப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More News

'விடாமுயற்சி' முதல் நாள் படப்பிடிப்பே அமர்க்களம்.. மாஸ் தகவல்..!

அஜித் நடிப்பில், மகிழ்திருமேனி இயக்கத்தில், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாக இருக்கும் 'விடாமுயற்சி' படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது.

'தலைவர் 170' படத்தின் பூஜை புகைப்படங்கள்.. இந்த விஜய் டிவி பிரபலம் இருக்கிறாரா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் 'தலைவர் 170' என்ற திரைப்படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு இன்று தொடங்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது

நடிக்க வருகிறார் தல தோனி.. ரஜினியின் 'தலைவர் 170' படத்துடன் கனெக்சன்..!

தல தோனியின் ஸ்டைலிஷான ஹேர் ஸ்டைல் கொண்ட புகைப்படம் கடந்த இரண்டு நாட்களாக இணையதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் அவர் நடிக்க வருவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.  

இறுதிக்கட்டத்தில் சூர்யாவின் 'கங்குவா' படப்பிடிப்பு.. ரிலீஸ் எப்போது?

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'கங்குவா' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின்  படப்பிடிப்பு இறுதி கட்டத்தை

'திருச்சிற்றம்பலம்' ஷோபனாவை விட சூப்பரா இருக்கும்: அடுத்த பட கேரக்டர் குறித்து நித்யா மேனன்..!

நடிகை நித்யா மேனன் தனது அடுத்த படத்தின் கேரக்டர் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறிய போது 'திருச்சிற்றம்பலம்' ஷோபனாவை விட இந்த கேரக்டர்  சூப்பராக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.