'லியோ' படத்தில் த்ரிஷாவுக்கு பாடல் இருக்குதா? 3வது சிங்கிள் அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Tuesday,October 10 2023]

தளபதி விஜய் நடித்த ’லியோ’ திரைப்படத்தில் இரண்டு பாடல்கள் மட்டுமே உள்ளதாக ஏற்கனவே செய்தி வெளியான நிலையில் இரண்டு பாடல்களும் வெளியாகி இணையத்தை ஸ்தம்பிக்க வைத்தது என்பதை பார்த்தோம். குறிப்பாக ’நா ரெடி’ என்ற பாடலும் ’படாஸ்’ என்ற பாடலும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்த படத்தில் மூன்றாவது ஒரு பாடலும் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இந்த பாடல் ரிலீஸ் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் சற்றுமுன் படக்குழுவினர் மூன்றாவது சிங்கிள் பாடல் நாளை வெளியாகும் என்று அறிவித்துள்ளனர். மேலும் இந்த பாடல் விஜய், த்ரிஷா மற்றும் அவர்களது குழந்தைக்கான பாடல் என்பதும் இன்று வெளியான போஸ்டரில் இருந்து தெரியவந்துள்ளது

’அன்பிலும்’ என்று தொடங்கும் இந்த பாடல் நாளை வெளியாக இருக்கும் நிலையில் இந்த பாடல் அனிருத்தின் மெலடி பாடலாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதிரடி ஆக்சன் படமான ’லியோ’ திரைப்படத்தில் விஜய்யுடன் த்ரிஷாவுக்கும் லோகேஷ் கனகராஜ் பாடல் வைத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.