தளபதி விஜய்யின் 'லியோ'.. அட்டகாசமான தெலுங்கு போஸ்டர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த ‘லியோ’ திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் தமிழில் உருவாகும் முதல் 1000 கோடி ரூபாய் வசூல் படம் என்றும் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து கிட்டத்தட்ட தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து விட்ட நிலையில் முழு வீச்சில் தற்போது படக்குழுவினர் ப்ரோமோஷன் பணியில் இறங்கியுள்ளனர்.
ஏற்கனவே நேற்று நடந்த திரைப்பட விழாவில் இன்று முதல் ப்ரோமோஷன் பணி தொடங்கும் என்று லோகேஷ் கனகராஜ் கூறிய நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் தெலுங்கு பதிப்பின் போஸ்டர் வெளியாகி உள்ளது.
விஜய்யின் ஸ்டைலிஷ் ஆன அட்டகாசமான லுக் இந்த போஸ்டரில் இருக்கும் நிலையில் இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக ஒரு திரைப்படத்தின் ஒரு போஸ்டரை அனைத்து மொழிகளுக்கும் பயன்படுத்துவார்கள். ஆனால் ‘லியோ’ படக்குழுவினர் வித்தியாசமாக ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு டிசைனில் போஸ்டரை வெளியிட்டு அசத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் ’லியோ’ படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை பெரும் பொருட்செலவில் லலித் தயாரித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.
#LeoTeluguPoster pic.twitter.com/Mr7o0qGKOy
— Vijay (@actorvijay) September 17, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout