இன்று முதல் சென்னையில் 'லியோ' படப்பிடிப்பு.. யார் யாரெல்லாம் கலந்து கொள்கிறார்கள் தெரியுமா?

  • IndiaGlitz, [Wednesday,April 05 2023]

விஜய் நடித்து வரும் ‘லியோ’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இன்று முதல் சென்னையில் நடைபெற உள்ளதை அடுத்து இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் நட்சத்திரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’லியோ’ என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.

சமீபத்தில் காஷ்மீரில் 60 நாட்கள் நீண்ட படப்பிடிப்பு நடந்தது என்பதும் இதில் விஜய், சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின், த்ரிஷா, ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் ’லியோ’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இன்று முதல் சென்னையில் நடைபெற இருப்பதாகவும் அதில் விஜய், சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் 60 நாட்கள் பாக்கி இருப்பதாகவும் விரைவில் படப்பிடிப்பை முடித்துவிட்டு போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளை தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

வரும் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை பெரும் பொருட்செலவில் லலித தயாரித்து வருகிறார். அனிருத் இசையில் பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

More News

'மாவீரன்' படத்தின் சூப்பர் அப்டேட்.. என்ன சொல்கிறார் இயக்குனர் மடோன் அஸ்வின்..!

சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'மாவீரன்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் சூப்பர் அப்டேட்டை இயக்குனர் மடோன் அஸ்வின் தெரிவித்துள்ள நிலையில் ரசிகர்கள்

பீச் மணலில் பிகினி போஸ்.. சீதா மகாலட்சுமி நடிகையின் கிளாமர் புகைப்படங்கள்..!

துல்கர் சல்மான், ரஷ்மிகா மந்தனா நடித்த 'சீதாராமம்' என்ற திரைப்படத்தில் நூர்ஜகான் என்ற சீதா மகாலட்சுமி என்ற இளவரசி கேரக்டரில் நடித்திருந்த நடிகையின் லேட்டஸ்ட் பிகினி புகைப்படங்கள்

ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரம்: முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் கைது..!

ஆபாச நடிகைக்கு முன்னாள் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் பணம் கொடுத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்த வழக்கில் நேற்று அவர் கைது செய்யப்பட்டு

நடிகை பூர்ணா வீட்டுக்கு வந்த புது உறவு.. முதல் நாளே புகைப்படம் வெளியிட்டு அசத்தல்..!

 நடிகை பூர்ணா கடந்த சில மாதங்களாக கர்ப்பமாக இருந்த நிலையில் தற்போது அவர் தனக்கு ஆண் குழந்தை பிறந்ததாக குறிப்பிட்டு முதல் நாளே குழந்தையின் புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது

'குக் வித் கோமாளி' போட்டியாளர்களுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஆச்சரிய தகவல்..!

 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மிகவும் முக்கியமானது 'குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி என்பதும் இந்த நிகழ்ச்சி 3 சீசன்கள் வெற்றிகரமாக நடந்த நிலையில் தற்போது