'லியோ' படப்பிடிப்பிற்கு பயன்படுத்தப்படும் கேமிராவின் விலை இத்தனை லட்சமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்து வரும் 'லியோ’ படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படப்பிடிப்பிற்கு பயன்படுத்தப்படும் கேமராவின் விலை குறித்து தகவல் பெறும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
தளபதி விஜய் நடிப்பில் லோகெஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ’லியோ’ படத்திற்கு பயன்படுத்தப்படும் கேமராவின் பெயர் V-RAPTOR XL என்றும் இந்த கேமராவை வைத்து தான் காஷ்மீரில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
6k மற்றும் 8k தரமுள்ள வீடியோவை இதில் பதிவு செய்யலாம் என்றும் உயர்ரக சென்சார் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் இந்த கேமராவின் விலை ரூ.40 லட்சத்திற்கும் அதிகம் என்றும் கூறப்படுகிறது. இந்த விலை உயர்ந்த அதிநவீன கேமராக்கள் மூலம் தான் காஷ்மீரில் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பிற்கு ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
லலித தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மாத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் நடித்து வருகின்றனர். பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.
#LEO
— Ayyappan (@Ayyappan_1504) March 5, 2023
Using V-Raptor XL Red Camera
- Can Take 6K S35 & 8K VV Videos
- Multi Format Sensor Harnessed in an All In One
- Price ₹42 Lakhs pic.twitter.com/viVMkASvd2
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout