வத்திக்குச்சியில எரிமலை மவனே.. நெருங்காதே நீ..  'லியோ' செகண்ட் சிங்கிள் பாடல்..!

  • IndiaGlitz, [Thursday,September 28 2023]

தளபதி விஜய் நடித்த ‘லியோ’ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ’நா ரெடி’ என்ற சிங்கிள் பாடல் ஏற்கனவே வெளியாகி உலகம் முழுவதும் ஹிட் ஆகியது.

இந்த நிலையில் ’லியோ’ படத்தில் இடம்பெற்ற இரண்டாவது பாடலான Badass என்ற பாடல் வெளியாகி உள்ள நிலையில் இந்த பாடல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அனிருத் கம்போஸ் செய்துள்ள இந்த பாடலை விஷ்ணு எடவன் எழுதியுள்ளார். இவர்தான் ’நான ரெடி’ பாடலையும் எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பாடலை அனிருத்தே பாடியுள்ளார் என்பது கூடுதல் சிறப்பு..

இந்த மாஸ் பாடலின் முதல் சில வரிகள் இதோ:

சிங்கம் இறங்குன காட்டுக்கே விருந்து
இவன் வேட்டைக்கு சிதறனும் பயந்து
பெரும்புள்ளிக்கெல்லாம் முற்றுப்புள்ளி எழுதி
குடல் உருவுற சம்பவம் உறுதி
இதுவரையில் நல்லவனா இருந்தான்
இந்த கதையில ராட்சசன் முகம் தான்

வத்திக்குச்சியில எரிமலை மவனே
நெருங்காதே நீ
குலசாமிய வேண்டிக்கோ மாமே
மொறைக்காதே நீ
உரசாம ஓடு உன் வால சுருட்டிடு