close
Choose your channels

'லியோ' இரண்டாம் பாகம் உருவாகிறதா? 2ஆம் பாகத்தின் டீசர் ரிலீஸ் தேதி இதுவா?

Tuesday, August 8, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்துள்ள 'லியோ’ திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகயிருக்கும் நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக இருப்பதாக கூறப்படுவது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி ‘லியோ’ படத்தின் டீசரே இன்னும் வெளியாகாத நிலையில் 2ஆம் பாகத்தின் டீசர் ரிலீஸ் தேதி குறித்த தகவலும் கிடைத்துள்ளது.

தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி இருக்கும் 'லியோ’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் 'லியோ’ படம் இரண்டு பாகங்களாக உருவாக்க திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் முதல் பாகத்தின் இறுதியில் இரண்டாம் பாகத்திற்கான டீசர் இருக்கும் என்று கூறப்படுவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே ‘லியோ 2’ படத்தின் டீசரை அக்டோபர் 19ஆம் தேதியே திரையரங்கில் காணலாம்.

மேலும் இரண்டாம் பாகம் வரும் 2025 அல்லது 26 ஆம் ஆண்டில் தொடங்கும் என்றும் லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய்யின் அடுத்த அடுத்த படங்களை பொறுத்து 'லியோ’ இரண்டாம் பாகம் உருவாகும் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே ’கைதி 2’ மற்றும் ‘விக்ரம் 2’ ஆகிய படங்கள் லோகேஷ் கனகராஜ் பட்டியலில் உள்ள நிலையில் தற்போது 'லியோ’ படத்தின் இரண்டாம் பாகமும் அந்த பட்டியலில் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment