இனிமேல் சரவெடி தான்.. அடுத்தடுத்து வரவிருக்கும் 'லியோ' அப்டேட்..!

  • IndiaGlitz, [Wednesday,September 13 2023]

தளபதி விஜய் நடித்த ‘லியோ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் புரமோஷன் பணிகளை தொடங்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்

எனவே இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் சரவெடி போல் வந்து கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற ’நா ரெடி’ என்ற முதல் சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் இந்த பாடல் 120 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் அடுத்த சிங்கிள் பாடல் கிட்டத்தட்ட தயார் நிலைக்கு வந்து விட்டதாக கூறப்படுகிறது.. கடந்த சில வாரங்களாக ’ஜவான்’ படத்தின் பணியில் பிஸியாக இருந்தார் அனிருத் தற்போது ‘லியோ’ படத்தில் முழு கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். அனிருத் பாடிய இந்த இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

மேலும் அடுத்த வாரம் முதல் ‘லியோ’ படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் ’லியோ’ படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை பெரும் பொருட்செலவில் லலித் தயாரித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

More News

'கேஜிஎப்' யாஷ் அடுத்த படத்தை இயக்குவது நடிகையா? ஆச்சரிய தகவல்..!

 பிரபல கன்னட நடிகர் யாஷ்  நடித்த 'கேஜிஎஃப்' மற்றும் 'கேஜிஎஃப் 2' ஆகிய இரண்டு திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் குறிப்பாக 'கேஜிஎஃப் 2' திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கும்

'தலைவர் 171' படத்திற்கு முன் அன்பறிவ், அனிருத்துடன் ஒரு படம்.. லோகேஷ் கனகராஜின் மாஸ் திட்டம்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'தலைவர் 171' படத்தின் அறிவிப்பு நேற்று அதிகாரபூர்வமாக வெளியானது என்பதும்

மாபெரும் கலைஞனின் சிறு சறுக்கலுக்கு உறுதுணையாக நிற்க வேண்டியது நமது கடமை: பிரபல தயாரிப்பாளர்..!

மாபெரும் கலைஞனின் சிறு சறுக்கலுக்கு உறுதுணையாக நிற்க வேண்டியது நமது கடமை என ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி விவகாரம் குறித்து பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து

ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி விவகாரம்: தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை..!

இசையமைப்பாளர் ஏஆர் ரகுமானின் 'மறக்குமா நெஞ்சம்' என்ற நிகழ்ச்சி சென்னையில் சமீபத்தில் நடந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர்கள் செய்த  சொதப்பல் காரணமாக டிக்கெட் வாங்கிய

செப்.28ல் 5 படங்கள் ரிலீஸ்.. ஒரு படம் திடீரென பின்வாங்கியதால் பரபரப்பு..!

செப்டம்பர் 28ஆம் தேதி 5 திரைப்படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதில் ஒரு படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.