சென்னையில் 'லியோ' அடுத்தகட்ட படப்பிடிப்பு.. யார் யார் கலந்து கொள்கிறார்கள் தெரியுமா?

  • IndiaGlitz, [Wednesday,April 26 2023]

தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதும் சமீபத்தில் கூட இந்த படத்தின் நீண்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருப்பதாகவும் அதில் விஜய், த்ரிஷா மற்றும் சஞ்சய் தத் ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த படப்பிடிப்பில் விஜய், த்ரிஷா சம்பந்தப்பட்ட ரொமான்ஸ் காட்சிகள் மற்றும் விஜய், சஞ்சய் தத் கலந்து கொள்ளும் ஆக்சன் காட்சிகள் நடைபெற இருப்பதாகவும் கிட்டத்தட்ட ஒரு மாதம் இந்த படப்பிடிப்பு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. இந்த படப்பிடிப்பு முடித்தவுடன் பட குழுவினர் அடுத்த கட்டமாக வெளிநாடு செல்ல திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை பெரும் பொருட்செலவில் லலித் தயாரித்து வருகிறார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

More News

மனித உறவுகளை நம்புபவர்.. சமுத்திரக்கனிக்கு வாழ்த்து தெரிவித்த அண்டை மாநில சூப்பர் ஸ்டார்..!

நடிகர் இயக்குனர் சமுத்திரக்கனி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் தங்களது பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்து

'தங்கலான்' டைட்டில் பிரிட்டிஷ் காலத்து புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டதா? என்ன அர்த்தம் தெரியுமா?

பா. ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் 'தங்கலான்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த டைட்டிலுக்கு என்ன அர்த்தம்? இந்த டைட்டில் எங்கே இருந்து

கோடைக்கு ஏற்ற குளுகுளு போட்டோஷூட்.. பிகினியில் நடிகை பூனம் பாஜ்வா

தமிழ் திரையுலகின் நடிகைகளில் ஒருவரான பூனம் பாஜ்வா கருப்பு பிகினி உடையில் எடுக்கப்பட்ட போட்டோ சூட் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில்

விருது வழங்கும் விழாவுக்கு வரும் காஸ்ட்யூமா இது? பிரபல நடிகைக்கு நெட்டிசன்கள் கண்டனம்..!

சமீபத்தில் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை பூனம் பாண்டே அணிந்திருந்த காஸ்ட்யூம்  குறித்து கடும் சர்ச்சைகள் எழுந்து வருகிறது.

தஞ்சைக்கு வரவில்லை என்றாலும் பக்கத்து ஊருக்கு வர்றாங்களே.. 'PS 2' படத்தின் இறுதிக்கட்ட  புரமோஷன் .. !

மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் அவர்களின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் நாளை மறுநாள் உலகம் முழுவதும்