பிரேக்கிங் பாயிண்டை தொட்டதுக்கு அப்புறம் யாராலும் அடிக்க முடியாது: 'லியோ' 8 நிமிட வீடியோ..!

  • IndiaGlitz, [Saturday,October 19 2024]

தளபதி விஜய் நடித்த லியோ திரைப்படம் வெளியாகி இன்றுடன் ஒரு வருடம் நிறைவு பெறும் நிலையில், இது குறித்து நெகிழ்ச்சியான ஒரு பதிவை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் செய்திருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது எடுக்கப்பட்ட 8 நிமிட வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதில் விஜய்யின் அதிரடி ஆக்சன் காட்சிகள், விஜய்-திரிஷாவின் ரொமான்ஸ் காட்சிகள், விஜய்யின் காபி ஹோட்டலில் நடக்கும் ஸ்டண்ட் காட்சிகள், அர்ஜுனின் ஆக்சன் காட்சிகள் உட்பட பல காட்சிகள் இருப்பதை காணலாம். திரையில் பார்க்காத பல காட்சிகளையும் இதில் பார்க்க முடிகிறது.

லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் நிறுவனத்தின் சமூக வலைதளப் பக்கத்தில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

விஜய் ரசிகர்கள் இந்த வீடியோவை பார்த்து ரசித்து வருகின்றனர். இந்த வீடியோவை பார்க்கும் போது, லோகேஷ் கனகராஜ், விஜய் உள்பட அனைவரும் எந்த அளவுக்கு ரிஸ்க் எடுத்து ஒவ்வொரு காட்சியையும் படமாக்கி உள்ளார்கள் என்பதையும் அறிய முடிகிறது என கமெண்ட்கள் வருகின்றன.

More News

என்ன ஏதுன்னு கூப்பிட்டு கொஞ்சம் அன்பா விசாரிப்போமா? பிக்பாஸ் விஜய் சேதுபதி..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், சனி ஞாயிறு என்றாலே கூடுதல் வரவேற்பு கிடைக்கும் என்பதும்,

'எதிர்நீச்சல் 2' சீரியலில் மதுமிதாவுக்கு பதில் இவரா? ஜனனி கேரக்டரை காப்பாற்றுவாரா?

'எதிர் நீச்சல்' சீரியல் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இதில் நடிக்கப் போவதில்லை என ஜனனி கேரக்டரில் நடித்த மதுமிதா அறிவித்திருந்தார்.

நிறுத்தும்மா.. அப்படி சொல்லாதே.. சாய்பல்லவியால் கடுப்பான சிவகார்த்திகேயன்..!

நேற்று நடந்த 'அமரன்' இசை வெளியீட்டு விழாவில் 'நடிகை சாய் பல்லவி தன்னை அண்ணா என்று அழைத்ததாகவும், அதனால் தான் கடுப்பானதாகவும்,  நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

மும்பையில் சூர்யாவை சர்ப்ரைஸ் ஆக சந்தித்த பிரபல நடிகை..  வைரல் வீடியோ..!

சூர்யாவுடன் ஒரே ஒரு திரைப்படத்தில் இணைந்து நடித்த பிரபல நடிகை, தற்செயலாக தனது கணவர் மற்றும் குழந்தையுடன் மும்பை விமான நிலையத்தில் இருக்கும் போது அங்கு வந்த சூரியாவை சந்தித்தார்.

தீபாவளி விருந்து: 'விடாமுயற்சி' வருகிறதோ இல்லையோ, இந்த 2 படங்களும் உறுதி..!

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி தினத்தில் மாஸ் நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும். ஆனால், இந்த ஆண்டு ரஜினிகாந்த், கமலஹாசன்,