'லியோ' காஷ்மீர் படப்பிடிப்பில் இவ்வளவு குளிரா? நடுக்கத்தில் படக்குழுவினர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்து வரும் 67வது திரைப்படமான ’லியோ’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக காஷ்மீரில் நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். விஜய், த்ரிஷா, பிரியா ஆனந்த், கெளதம் மேனன் உள்பட பலர் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டதாக தெரிகிறது.
காஷ்மீரில் இண்டோர் படப்பிடிப்பு மட்டும் இன்றி வெளிப்புற படப்பிடிப்பும் நடைபெற்று வருவதாகவும் படக்குழுவினர் திட்டமிட்டபடி விறுவிறுப்பாக படப்பிடிப்பை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது காஷ்மீரில் உச்சகட்ட குளிர் இருப்பதாகவும், ஒரு சில நேரங்களில் 8 டிகிரி செல்சியஸ் மட்டுமே வெப்பநிலை இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விஜய் உள்பட படக்குழுவினர் அனைவரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு முழு ஒத்துழைப்பு தருவதை அடுத்து திட்டமிட்டபடி படபிடிப்பு நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
இன்னும் கிட்டத்தட்ட ஒரு மாதம் காஷ்மீரில் தான் படப்பிடிப்பு நடக்கும் என்றும் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகள் உட்பட பல முக்கிய காட்சிகள் இந்த படப்பிடிப்பில் படமாக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மாத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலரது நடிப்பில் உருவாகி வரும் ‘லியோ’ படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments