ரத்தக்களறியுடன் கையில் கோடாரி.. ஓநாயின் பின்னணி.. அசத்தலான 'லியோ' ஃபர்ஸ்ட்லுக்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் இன்று 49 வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவர் நடித்து வரும் ‘லியோ’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாலை 12 மணிக்கு வெளியாகி இணைய தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த மாதத்துடன் இந்த படப்பிடிப்பு முடிவடைந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இன்று விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் ‘லியோ’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் சிங்கிள் பாடல் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் அதிகாலை 12 மணிக்கு ‘லியோ’ படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. விஜய் தனது கையில் ரத்த களறியுடன் இருக்கும் கோடாரியை வைத்திருப்பது போன்ற பின்னணியில் ஓநாய் ஆவேசமாக கத்துவது போன்றும் காஷ்மீர் பின்னணியில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த போஸ்டர் விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போஸ்டரை பார்க்கும்போது இந்த படம் முழுக்க முழுக்க ஒரு அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று மாலை வெளியாக இருக்கும் நான் ரெடி என்ற பாடல் மிகப்பெரிய வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயுதபூஜை விருந்தாக வரும் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள 'லியோ’ படத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை பெரும் பொருட்செலவில் லலித் தயாரித்து வருகிறார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.
#LeoFirstLook pic.twitter.com/zephjhBVbu
— Vijay (@actorvijay) June 21, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout