'லியோ' படத்தின் வியாபாரம் தொடங்கியது.. வெளிநாட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்து வரும் ’லியோ’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் நிலையில் தற்போது இந்த படத்தில் வியாபாரம் தொடங்கி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் லலித் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’லியோ’. இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர், சென்னை, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற நிலையில் தற்போது மீண்டும் சென்னையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் அல்லது ஜூலைக்குள் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் வியாபாரமும் தொடங்கிவிட்டது. குறிப்பாக இந்த படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமையை பார்ஸ் பிலிம்ஸ் என்ற நிறுவனம் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
’லியோ’ திரைப்படத்தின் வெளிநாட்டு உரிமையை நாங்கள் பெற்றுள்ளோம், மிகப்பெரிய அளவில் இந்த படத்தை உலகம் முழுவதும் வெளியிட திட்டமிட்டு உள்ளோம் என்றும் பார்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Hold on to your seats as @PharsFilm is all set to deliver our prestigious movie #LEO overseas 🔥
— Seven Screen Studio (@7screenstudio) June 3, 2023
Happy to be associated with Phars Film for the overseas release#LEOwithPharsFilm #LeoFilm #Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @trishtrashers @anirudhofficial @duttsanjay… pic.twitter.com/SporeSi8Dz
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments