அன்பெனும் ஆயுதம் தானே ஒரு வீரனின் நெஞ்சமே.. 'லியோ' சிங்கிள் பாடல்..!

  • IndiaGlitz, [Wednesday,October 11 2023]

தளபதி விஜய் நடித்த 'லியோ’ திரைப்படம் வரும் 19ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி இணையத்தில் வைரலானது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தில் இடம்பெற்ற ’அன்பினும்’ என்ற பாடல் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அனிருத் கம்போஸ் செய்த இந்த மெலடி பாடலை அனிருத் மற்றும் லோதிகா பாடியிருக்க விஷ்ணு எடாவன் எழுதியுள்ளார். இவர்தான் ஏற்கனவே இந்த படத்தின் இரண்டு பாடல்களை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பாடல் முதல் முறை கேட்கும் போதே மனதை உருக வைக்கும் அளவுக்கு இருக்கிறது என்று விஜய் ரசிகர்கள் கமெண்ட் அளித்து வருகின்றனர். இந்த பாடலில் இடம்பெற்ற முதல் சில வரிகள் இதோ:

உயிர் பாதியே உனக்கே
உன்னில் பாதியே எனக்கே
அன்பெனும் ஆயுதம் தானே
ஒரு வீரனின் நெஞ்சமே

நரை வந்தும் எனக்கே
துணை நீயே அருகே
அன்பெனும் ஆயுதம் தானே
ஒரு வீரனின் நெஞ்சமே

புயல் காற்றில் பனி சேர்ந்தால்
உயிர்த்தீயே உனக்காக
அன்பெனும் ஆயுதம் தானே
என்றென்றும் வீரனே