தளபதி விஜய்யின் தரமான கடைசி படம்.. 5 நிமிட வீடியோவை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்..!

  • IndiaGlitz, [Friday,September 13 2024]

தளபதி விஜய் நடிக்க இருக்கும் கடைசி திரைப்படமான ’தளபதி 69’ படத்தின் அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று கேவிஎம் புரடொக்சன்ஸ் நிறுவனம் அறிவித்திருந்த நிலையில் சற்றுமுன் ஐந்து நிமிடங்களுக்கு மேலான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில் தளபதியின் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அவரை பற்றி கூறும் கருத்துக்கள் அவருடைய 68 படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்புகள் ஆகிய காட்சிகள் உள்ளன.

மேலும் தளபதி விஜய் அவர்கள் அரசியலுக்கு வர இருப்பதால் ’தளபதி 69’ படம் தான் கடைசி படம் என்பதால் அந்த படத்தை நாங்கள் திருவிழா போல் கொண்டாடுவோம் என்று ரசிகர்கள் கூறிய காட்சியும் அந்த வீடியோவில் உள்ளன.

இந்த வீடியோவின் இறுதியில் தளபதி விஜய்யின் கடைசி திரைப்படமான ’தளபதி 69’ படத்தின் அறிவிப்பு நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து விஜய் ரசிகர்கள் நாளைய தினத்தை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.