தளபதியின் 'GOAT' படத்தின் செகண்ட் லுக்.. அதிரடி ஆக்சன் அவதாரத்தில் டபுள் விஜய்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்து வரும் 68 வது திரைப்படத்திற்கு ‘GOAT’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது என்பதும் இந்த போஸ்டர் இணையத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்த நிலையில் சற்றுமுன் அந்த போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
பைக்கில் அப்பா மற்றும் மகன் விஜய் ஆகிய இருவரும் செல்லும் இந்த புகைப்படத்தில் இருவரது கையிலும் துப்பாக்கிகள் இருப்பதை பார்க்கும்போது இந்த படம் ஒரு அதிரடி ஆக்சன் படம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக இளமையான விஜய்யை பார்க்க அசத்தலாக உள்ளதால் ரசிகர்களுக்கு இந்த படம் பெரும் விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெங்கட் பிரபு ஒரு ஸ்டைலான வித்தியாசமான விஜய்யின் இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய், பிரபுதேவா, பிரசாந்த், மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். யுவன்ஷங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் இந்த படம் உருவாகி வருகிறது. ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் வரும் ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Get ready for the action! #Thalapathy with #IlayaThalapathy is #TheGreatestOfAllTime#Thalapathy68FirstLook#AGS25 #Thalapathy68 @actorvijay Sir@ags_production #KalpathiSAghoram #KalpathiSGanesh #KalpathiSSuresh @vp_offl @archanakalpathi @aishkalpathi @venkat_manickam… pic.twitter.com/iilIOTQhfp
— AGS Entertainment (@Ags_production) January 1, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments