பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா? அதிரடி கலக்கட்டுமா? 'கோட்' படத்தில் விசில் போடு பாடல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘கோட்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று சித்திரை புத்தாண்டு தினத்தில் விசில் போடு என்ற பாடல் வெளியாகும் என்ற தகவல் ஏற்கனவே வெளியானது.
யுவன் ஷங்கர் ராஜா கம்போஸ் செய்த இந்த பாடலை விஜய் பாடி இருப்பதாகவும் இந்த பாடலை மதன் கார்க்கி எழுதி இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சற்றுமுன் இந்த பாடல் வெளியாகி உள்ள நிலையில் இந்த பாடலை முதல் வரியே ’பார்ட்டி ஒன்று தொடங்கட்டுமா, அதிரடி கலகட்டுமா, கேம்பேனே தான் தொறக்கட்டுமா, மைக்கை கையில் எடுக்கட்டுமா’ என்று மறைமுக அரசியல் கருத்துக்கள் உள்ளதை அடுத்து விஜய் ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் படத்துக்கு இசையமைக்கும் யுவன் சங்கர் ராஜா முதல் பாடலையே செம ஆட்டம் போடும் வைக்கும் பாடலாக கம்போஸ் செய்திருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
இந்த பாடல் வெளியாகி ஒரு சில நிமிடங்களை ஆகி உள்ள நிலையில் லட்சக்கணக்கான பார்வையாளர்கள் குவிந்து விட்டதை அடுத்து இந்த பாடல் வீடியோ பார்வையாளர்கள் எண்ணிக்கையில் புதிய சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த பாடலின் முதல் சில வரிகள் இதோ:
பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா? அதிரடி கலக்கட்டுமா?
கேம்பனை தான் தொறக்கட்டுமா? மைக்கை கையில் எடுக்கட்டுமா?
இடி இடிச்சா என் வாய்ஸ் தான். வெடி வெடிச்சா என் பாய்ஸ் தான்
குடிமகன் தான் நம் கூட்டணி, பார்ட்டி விட்டு தான் போ மாட்டேன் நீ
சத்தம் பத்தாது விசில் போடு, குத்தம் பாக்காம விசில் போடு
ரத்தம் பாத்ததும் விசில் போடு ஹே நண்பி நண்பா விசில் போடு
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com