தளபதி விஜய்யின் 'GOAT' படத்தின் அடுத்தடுத்த படப்பிடிப்புகள் எங்கே? மாஸ் தகவல்..!

  • IndiaGlitz, [Sunday,January 07 2024]

தளபதி விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ’GOAT’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ’GOAT’ படத்தின் அடுத்தடுத்த படப்படிப்புகள் எங்கெங்கே நடைபெற உள்ளன என்பது குறித்த தகவல் கசிந்து உள்ளது. சென்னையில் தற்போது நடைபெற்று வரும் படப்பிடிப்பு முடிவடைந்த உடன் அடுத்தகட்டமாக ’GOAT’ படக்குழுவினர் இலங்கை செல்ல இருப்பதாகவும், இலங்கையில் படப்பிடிப்பை முடித்துவிட்டு ராஜஸ்தான் செல்ல இருப்பதாகவும் அதனை அடுத்து இஸ்தான்புல் செல்ல இருப்பதாகவும் தெரிகிறது.

மேற்கண்ட மூன்று இடங்களிலும் படப்பிடிப்பு முடித்த பின்னர் மீண்டும் சென்னையில் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் அதன் பிறகு மீண்டும் வெளிநாட்டில் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

விஜய், பிரபுதேவா, பிரசாந்த், மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து வருகின்றனர். வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

More News

நயன்தாரா படத்தில் சர்ச்சை காட்சிகள்? போலீசில் புகார் அளித்த அரசியல் கட்சி பிரமுகர்..!

நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான ஒரு திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக மும்பை போலீசில் அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிறகடிக்க ஆசை: மீனா-முத்து கஷ்டங்களுக்கு முற்றுப்புள்ளி.. தொடங்குகிறது மனோஜ்-ரோஹினி பிரச்சனை..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' என்ற சீரியல் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த சீரியலில் கடந்த சில மாதங்களாக மீனா மற்றும் முத்து ஆகிய

இது என்ன சம்மரா? திருமணமாகி குழந்தை பிறந்த பின்னரும் பிகினியில் பிரபல நடிகை..!

சூர்யா கார்த்தி உள்பட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த நடிகை துபாயில் பிகினியில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் இணையத்தில்

அந்த காலத்திலேயே LCU மாதிரி சினிமாட்டிக் யுனிவர்ஸ் படம் எடுத்த பாரதிராஜா.. பட்டிமன்ற பேச்சாளர் வீடியோ..!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது முந்தைய படங்களின் காட்சிகள் மற்றும் கேரக்டர்களை அடுத்தடுத்த படங்களில் காட்டி வருவதால் அவரது திரைப்படங்கள் LCU என்று  கூறப்படுகின்றன.

டாம் & ஜெர்ரியாக இருந்த விசித்ரா-தினேஷை ஒரே நிமிடத்தில் சேர்த்து வைத்த கமல்ஹாசன்..!

டாம் அண்ட் ஜெர்ரி போல் பிக் பாஸ் வீட்டில் தினந்தோறும் சண்டை போட்டுக் கொண்டிருந்த விசித்ரா மட்டும் தினேஷ் ஆகிய இருவரையும் கமல்ஹாசன் ஒரே நிமிடத்தில்