தளபதி விஜய்யின் 'கோட்'.. 3 மணி நேரத்திற்கு மேல் ரன்னிங் டைம்.. 7 சென்சார் கட்ஸ்..!

  • IndiaGlitz, [Tuesday,August 27 2024]

தளபதி விஜய் நடித்துள்ள ’கோட்’ திரைப்படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 59 நிமிடங்கள் என்று ஏற்கனவே செய்தி வெளியான நிலையில் தற்போது மூன்று மணி நேரத்திற்கு அதிகமாக ரன்னிங் டைம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான ’கோட்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் சென்சார் சான்றிதழ் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ’யுஏ’ சான்றிதழ் அளித்துள்ளதாகவும் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 59 நிமிடங்கள் என்றும் கூறப்பட்டது.

ஆனால் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின் படி இந்த படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரம் 3 நிமிடங்கள் என்றும் சென்சார் அதிகாரிகள் ஏழு இடங்களில் கட் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

ஏற்கனவே சமீபத்தில் வெளியான ’இந்தியன் 2’ திரைப்படம் 3 மணி நேரத்திற்கு அதிகமாக ரன்னிங் டைம் இருந்தது, அந்த படத்தின் தோல்விக்கு ஒரு காரணம் என்று கூறப்பட்ட நிலையில் ’கோட்’ திரைப்படமும் 3 மணி நேரத்துக்கு மேல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் வெங்கட் பிரபு 3 மணி நேரம் ரசிகர்களை உட்கார வைக்கும் அளவுக்கு விறுவிறுப்பாக காட்சிகளை வைத்திருப்பார் என்று நம்பப்படுகிறது

More News

அனுமோகன் கணிப்பு💥: டிசம்பர் 31க்குள் பேரழிவு? பொங்கும் கடல் ! எரியும் நெருப்பு !

பிரபல நடிகர் அனுமோகன், தனது சமீபத்திய ஆன்மீகக்ளிட்ஸ் சேனல் வீடியோவில் அதிர்ச்சிகரமான கணிப்பை வெளியிட்டுள்ளார்.

திடீரென பரவும் 'லால் சலாம்' படத்தின் வதந்தி.. தயாரிப்பு தரப்பு விளக்கம் அளிக்குமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான 'லால் சலாம்' திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில்

'கொட்டுக்காளி' திரைப்படத்தை ரிலீஸ் செய்திருக்க கூடாது: இயக்குனர் அமீர்

சமீபத்தில் வெளியான 'கொட்டுக்காளி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கும் நிலையில் இந்த படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்திருக்கக் கூடாது

திரையுலகமே ஒரு விபச்சார விடுதி தான்: பிரபல நடிகை ஆவேசம்..!

ஏற்கனவே நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவதாக மலையாள திரை உலகில் ஒரு பெரிய பூகம்பம் ஏற்பட்டுள்ள நிலையில் வங்காள திரை உலகமே ஒரு விபச்சார

ரஜினியின் அடுத்த படத்தில் அமீர்கான் நடிக்கின்றாரா? வேற லெவல் சம்பவம்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'கூலி' திரைப்படத்தில் அமீர்கான் நடிக்க இருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.