தளபதி விஜய்யின் 'கோட்' ஓடிடி ரிலீஸ் எப்போது? நெட்பிளிக்ஸ் அதிரடி அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Tuesday,October 01 2024]

தளபதி விஜய் நடித்த ‘கோட்’ திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியான நிலையில், இந்த படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் தேதி குறித்து அறிவிப்பை நெட்பிளிக்ஸ் தனது சமூக வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தளபதி விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான திரைப்படம் ‘கோட்’ . இந்த படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகி, ரூபாய் 400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அக்டோபர் மூன்றாம் தேதி, அதாவது நாளை மறுநாள், நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ’கோட்’ வெளியாக உள்ளது. இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானதற்கு பிறகு விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

கோட் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், ஓடிடியிலும் நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ஐசியூவில் ரஜினிகாந்த்: என்ன சொல்கிறார்கள் மருத்துவர்கள்? பரபரப்பு தகவல்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல் நல குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வந்த நிலையில், இது ஒரு சாதாரண பரிசோதனை

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி: 16 போட்டியாளர்கள் இவர்களா? புதிய லிஸ்ட்..!

விஜய் தொலைக்காட்சியில் அக்டோபர் 6ஆம் தேதி பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கான தகவல்கள்

'மெய்யழகன்' ட்ரிம் செய்யப்பட்டது ஏன்? இயக்குனர் பிரேம்குமார் விளக்கம்..!

கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி நடிப்பில் பிரேம்குமார் இயக்கத்தில் உருவான 'மெய்யழகன்' திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை

ட்ரிம் செய்யப்பட்ட கார்த்தியின் 'மெய்யழகன்'.. நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன?

கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி நடிப்பில் உருவான 'மெய்யழகன்' திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில், இந்த படத்தின் ரன்னிங் டைம் அதிகமாக இருப்பதால்,

ரஜினிகாந்த் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி.. லதா ரஜினிகாந்த், மருத்துவர்கள் கூறுவது என்ன?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள இருப்பதாக மருத்துவர்கள்