தளபதி விஜய்யின் 'கோட்' ஓடிடி ரிலீஸ் எப்போது? நெட்பிளிக்ஸ் அதிரடி அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Tuesday,October 01 2024]

தளபதி விஜய் நடித்த ‘கோட்’ திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியான நிலையில், இந்த படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் தேதி குறித்து அறிவிப்பை நெட்பிளிக்ஸ் தனது சமூக வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தளபதி விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான திரைப்படம் ‘கோட்’ . இந்த படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகி, ரூபாய் 400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அக்டோபர் மூன்றாம் தேதி, அதாவது நாளை மறுநாள், நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ’கோட்’ வெளியாக உள்ளது. இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானதற்கு பிறகு விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

கோட் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், ஓடிடியிலும் நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.