தளபதி விஜய்யின் 'கோட்' .. வட இந்திய ரிலீஸ் உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ‘கோட்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் ஒரு பக்கம், பிசினஸ் இன்னொரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.
ஏற்கனவே இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமை உள்பட சில பிசினஸ் முடிந்துவிட்ட நிலையில் தற்போது வட இந்திய ரிலீஸ் குறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வட இந்திய மாநிலங்களில் ‘கோட்’ திரைப்படத்தை ஹிந்தி மட்டுமின்றி தமிழ் தெலுங்கிலும் ரிலீஸ் செய்யும் உரிமையை ஜி ஸ்டுடியோஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே செப்டம்பர் 5ஆம் தேதி விஜய்யின் வட இந்திய ரசிகர்களும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அவரவர் தாய்மொழியில் பார்த்து மகிழலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரிய அளவில் படங்களை புரமோஷன் செய்து பல படங்களை வெற்றி படமாக்கிய ஜி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் கையில் ‘கோட்’ படம் சென்றுள்ளதால் வட இந்தியாவில் நல்ல வசூல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய், மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், ஜெயராம், சினேகா, லைலா, வைபவ், பிரேம்ஜி, யுகேந்திரன், பார்வதி நாயர், விடிவி கணேஷ், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் சித்தார்த் நுனி ஒளிப்பதிவில் வெங்கட்ராஜன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.
Namma #ThalapathyVijay's #GOAT goes up North in style! #TheGreatestOfAllTime - North India release by #ZeeStudios in Hindi, Tamil and Telugu languages. Get ready for a roaring rollercoaster ride 🔥
— Zee Studios (@ZeeStudios_) August 8, 2024
Setting the screens on fire from September 5th!
THALAPATHY @actorvijay !
A… pic.twitter.com/Usp5FF5OXj
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com