close
Choose your channels

ஹாலிவுட் தரத்தில் சேஸிங்.. 2050ல் நடக்கும் கதை.. வெங்கட்பிரபுவின் 'கோட்' சம்பவம்..!

Saturday, June 22, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கோட்’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ இன்று அதிகாலை 12.01 மணிக்கு வெளியாகியுள்ள நிலையில் இந்த வீடியோவில் உள்ள காட்சிகள் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் மாஸ்கோ சாலைகளில் உள்ள சேஸிங் காட்சிகள், 2050 ஆம் ஆண்டு நடக்கும் கதை என்ற ஷாட், தந்தை மகன் ஆகிய இருவரும் பைக்கில் செல்லும் போது உள்ள பரபரப்பான காட்சிகள், நட்சத்திர ஓட்டலில் நடக்கும் ஸ்டண்ட் காட்சிகள், காரின் கண்ணாடியை திறக்கும் விஜய்யின் காட்சிகள் ஆகியவை வெறும் 50 வினாடி க்ளிம்ப்ஸ் வீடியோவில் இருப்பதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

குறிப்பாக இந்த கிளிம்ப்ஸ் வீடியோவில் இருந்து இந்த படத்தின் கதை டைம் டிராவல் கதை என்பதும் 2050 ஆம் ஆண்டு நடக்கும் கதை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் வெங்கட் பிரபு இந்த படத்தில் விஜய்யை வைத்து ஒரு தரமான சம்பவம் செய்து உள்ளார் என்பது ஒவ்வொரு காட்சியிலிருந்து தெரிய வருகிறது. குறிப்பாக சேஸிங் காட்சிகள் ஹாலிவுட் படங்களை மிஞ்சும் அளவுக்கு தரமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து சொல்லி வருகின்றனர்.

ஏற்கனவே இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில் தற்போது இந்த க்ளிம்ப்ஸ் வீடியோ எதிர்பார்ப்பின் உச்சத்தை அடைய வைத்துள்ளது என்பதும், நிச்சயம் இந்த படம் விஜய்யின் திரையுலக வாழ்க்கையில் ஒரு சாதனை படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment