ஹாலிவுட் தரத்தில் சேஸிங்.. 2050ல் நடக்கும் கதை.. வெங்கட்பிரபுவின் 'கோட்' சம்பவம்..!

  • IndiaGlitz, [Saturday,June 22 2024]

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கோட்’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ இன்று அதிகாலை 12.01 மணிக்கு வெளியாகியுள்ள நிலையில் இந்த வீடியோவில் உள்ள காட்சிகள் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் மாஸ்கோ சாலைகளில் உள்ள சேஸிங் காட்சிகள், 2050 ஆம் ஆண்டு நடக்கும் கதை என்ற ஷாட், தந்தை மகன் ஆகிய இருவரும் பைக்கில் செல்லும் போது உள்ள பரபரப்பான காட்சிகள், நட்சத்திர ஓட்டலில் நடக்கும் ஸ்டண்ட் காட்சிகள், காரின் கண்ணாடியை திறக்கும் விஜய்யின் காட்சிகள் ஆகியவை வெறும் 50 வினாடி க்ளிம்ப்ஸ் வீடியோவில் இருப்பதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

குறிப்பாக இந்த கிளிம்ப்ஸ் வீடியோவில் இருந்து இந்த படத்தின் கதை டைம் டிராவல் கதை என்பதும் 2050 ஆம் ஆண்டு நடக்கும் கதை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் வெங்கட் பிரபு இந்த படத்தில் விஜய்யை வைத்து ஒரு தரமான சம்பவம் செய்து உள்ளார் என்பது ஒவ்வொரு காட்சியிலிருந்து தெரிய வருகிறது. குறிப்பாக சேஸிங் காட்சிகள் ஹாலிவுட் படங்களை மிஞ்சும் அளவுக்கு தரமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து சொல்லி வருகின்றனர்.

ஏற்கனவே இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில் தற்போது இந்த க்ளிம்ப்ஸ் வீடியோ எதிர்பார்ப்பின் உச்சத்தை அடைய வைத்துள்ளது என்பதும், நிச்சயம் இந்த படம் விஜய்யின் திரையுலக வாழ்க்கையில் ஒரு சாதனை படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

More News

விஜய் சேதுபதி அடுத்த படத்தின் இயக்குனர் இவரா? குடும்ப செண்டிமெண்ட் நிச்சயம்..!

விஜய் சேதுபதி நடித்த 50வது திரைப்படமான 'மகாராஜா' சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூலாகி

சிங்கிள் பாடல் மட்டுமல்ல.. இன்னொரு ட்விஸ்டும் இருக்குது.. 'கோட்' ரசிகர்களுக்கு செம்ம விருந்து..!

தளபதி விஜயின் பிறந்தநாள் நாளை கொண்டாட இருப்பதை அடுத்து அவர் நடித்து முடித்துள்ள 'கோட்' படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது

'சின்ன சின்ன கண்கள்' பாடல்.. விஜய்யுடன் பாடியது இந்த பிரபலமா? எதிர்பார்க்கவே இல்லை..!

தளபதி விஜய் நடித்த 'கோட்' படத்தின் 'சின்ன சின்ன கண்கள்' என்ற செகண்ட் சிங்கிள் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என இயக்குனர் வெங்கட் பிரபு அறிவித்து இருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

10 லட்ச ரூபாய் சம்பாதிக்க உழைக்க தேவையில்லை.. கள்ளச்சாராயம் குடித்தால் போதும்: கஸ்தூரி

10 லட்ச ரூபாய் சம்பாதிக்க கஷ்டப்பட்டு உழைக்க தேவையில்லை, கள்ளச்சாராயம் குடித்தால் போதும் என நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒருவர் மீது ஒருவர் படுத்து யோகா.. சமீபத்தில் திருமணமான நடிகையின் யோகா புகைப்படங்கள்..!

சமீபத்தில் திருமணமான நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது கணவருடன் செய்த யோகா குறித்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.