close
Choose your channels

'கோட்' படத்தின் 8 நாள் வசூல்.. இந்தியாவில் மட்டும் இத்தனை கோடியா?

Friday, September 13, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான திரைப்படம் ‘கோட்’ . இந்த படம் கடந்த 5ஆம் தேதி வெளியான நிலையில் முதல் நாள் முதல் காட்சி முடிந்தவுடன் பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்தது. மேலும் இந்த படம் முதல் நாள் 126 கோடி ரூபாய்க்கு மேல் அதிகமாக வசூல் செய்ததாகவும் இரண்டாவது நாளில் 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாகவும் கூறப்பட்டது.

மேலும் ‘கோட்’ திரைப்படம் கடந்த ஏழு நாட்களில் இந்தியாவில் மட்டும் 171.25 கோடி ரூபாய் வசூலானதாக செய்தி வெளியான நிலையில், செப்டம்பர் 12ஆம் தேதியான 8வது நாளில் இந்தியாவில் 6.58 கோடி ரூபாய் வசூலானதாகவும், 8 நாளில் இந்தியாவில் மட்டும் 177.75 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே இந்த படம் உலகம் முழுவதும் ரூ.300 கோடி வசூலை தாண்டி விட்ட நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் 400 கோடி என்று மைல் கல்லை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய், மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், ஜெயராம், சினேகா, லைலா, வைபவ், பிரேம்ஜி, யுகேந்திரன், பார்வதி நாயர், விடிவி கணேஷ், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் சித்தார்த் நுனி ஒளிப்பதிவில் வெங்கட்ராஜன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment