விஜய்யின் 'கோட்' திரைப்படத்திற்கு சென்சார் கொடுத்த சான்றிதழ்? வெங்கட் பிரபு அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Wednesday,August 21 2024]

தளபதி விஜய் நடித்த ‘கோட்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல் குறித்து அறிவிப்பை இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார்.

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கோட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்ட நிலையில் இந்த படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் தேதி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு வாரத்திற்கு முன்பே வெளிநாட்டுக்கு பிரிண்ட்களை அனுப்ப வேண்டும் என்பதால் இந்த படத்தின் சென்சார் பணிகள் முடிவடைந்துள்ளன.

‘கோட்’ திரைப்படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு யூஏ சான்றிதழ் கொடுத்துள்ளதாக இயக்குனர் வெங்கட் பிரபு தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளதை அடுத்து விஜய் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர். மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் உள்பட சில தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தத்தில் திட்டமிடப்பட்ட நேரத்திற்கு முன்பே ‘கோட்’ படத்தின் பணிகள் முடிந்து வருவதை அடுத்து இந்த படம் செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய், மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், ஜெயராம், சினேகா, லைலா, வைபவ், பிரேம்ஜி, யுகேந்திரன், பார்வதி நாயர், விடிவி கணேஷ், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் சித்தார்த் நுனி ஒளிப்பதிவில் வெங்கட்ராஜன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

More News

ரசனைக் குறைபாடுள்ளவர்கள் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.. ஒரு சிலருக்கு எச்சரிக்கை.. கமல்ஹாசன்

சூரி நடித்த 'கொட்டுக்காளி' என்ற திரைப்படம் ஆகஸ்ட் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தை பார்த்த உலகநாயகன் கமல்ஹாசன் படக்குழுவினர்களுக்கு பாராட்டு தெரிவித்து

சிங்கமுத்துவிடம் ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்ட வடிவேலு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

நடிகர் சிங்கமுத்துவிடம் 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நடிகர் வடிவேலு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் இந்த மனு விசாரணையில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி

விஜய் டிவி  சீரியல் நாயகிக்கு கிடைத்த சினிமா வாய்ப்பு.. ஹீரோ யார் தெரியுமா?

விஜய் டிவி சீரியல் நடிகைக்கு சினிமா வாய்ப்பு கிடைத்துள்ளதை அடுத்து இந்த படத்தின் ஹீரோ யார் என்பது உள்பட சில தகவல்கள் வெளியாகி உள்ளன. 

'மகாராஜா' படத்தை மிஸ் செய்தாரா சாந்தனு? அவரே சொன்ன தகவல்..!

இந்தியாவின் தலைசிறந்த திரைக்கதை ஆசிரியர் என்று கே.பாக்யராஜ் போற்றப்படும் நிலையில் அவரது மகன் சாந்தனு ஒரே ஒரு சூப்பர் ஹிட் வெற்றி படத்திற்காக பல ஆண்டுகளாக காத்திருக்கிறார்.

பழம்பெரும் நடிகர் சோ மனைவி காலமானார். அரசியல் தலைவர்கள் இரங்கல்..!

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் சோ ராமசாமி கடந்த 2016 ஆம் ஆண்டு காலமான நிலையில் அவரது மனைவி இன்று காலை காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.