இந்த அரசியல் விளையாட்டெல்லாம் நமக்கு செட் ஆகாது: 'பீஸ்ட்' டிரைலர்
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம் வரும் 13ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. சுமார் 3 நிமிடங்கள் இருக்கும் இந்த ட்ரெய்லரில் ஒவ்வொரு காட்சியும் விஜய் ரசிகர்களுக்கு செம விருந்தாக அமைவது உறுதி என்பது குறிப்பிடத்தக்கது
சென்னை சிட்டியில் முக்கிய இடத்தில் உள்ள மால் ஒன்றில் திடீரென தீவிரவாதிகள் புகுந்து அந்த மாலில் உள்ளவர்களை பணய கைதியாக வைத்திருக்கின்றனர். அதிர்ஷ்டவசமாக அந்த மாலில் வீரராகவன் என்ற ராணுவ வீரரும் இருப்பதால் தீவிரவாதிகளிடம் பொதுமக்கள் மாட்டிக் கொண்டார்களா? அல்லது வீரராகவனிடம் தீவிரவாதிகள் மாட்டிக் கொண்டார்களா என்று நினைக்கும் வகையில் அதிரடியாக ஒற்றை மனிதனாக ராணுவ வீரனுக்கும் தீவிரவாத குழுவிற்கும் இடையே நடக்கும் போர் தான் இந்த படத்தின் கதை என்பது தெளிவாக தெரிகிறது
இந்த படத்தில் அரசு முக்கிய அதிகாரியாக செல்வராகவன் நடித்துள்ளார். இந்த டிரைலரில் அவர் பேசும் ஒவ்வொரு வசனமும் விஜய்யின் மாஸ் கேரக்டரை குறிப்பிடுவதாக அமைந்துள்ளது.
இதைவிட கடுப்பான விஷயம் என்ன தெரியுமா? இதில் தீவிரவாதிக்கும் அரசுக்கும் இடையே நான்தான் பஞ்சாயத்து செய்ய வேண்டுமாம் இதைவிட பழைய பில்டிங் கிடைக்கவில்லையா தும்மினால் விழுந்துரும் போல இருக்கு
இந்த கெட்ட நேரத்திலும் ஒரு நல்ல நேரம், இந்த ஹைஜாக்கில் தற்செயலாக நம்ம பையன் ஒருத்தன் உள்ளே இருக்கிறான். பையன்னா சாதாரணமாக நினைத்து விடாதீர்கள் ஒரு மிகச் சிறந்த இராணுவ வீரர்களில் ஒருவன்
மேற்கண்ட செல்வராகவனின் வசனங்களும்,
என்ன பயமாக இருக்கிறதா? இதுக்கு அப்புறம் இன்னும் பயங்கரமாக இருக்கும்
இந்த அரசியல் விளையாட்டு எல்லாம் நமக்கு செட்டாகாது
நான் ஒரு அரசியல்வாதியல்ல ராணுவ வீரன் ஆகிய விஜய் வசனங்களும் மாஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது
அனிருத்தின் அட்டகாசமான பின்னணி இசை, கலை இயக்குனரின் அற்புதமான மால் செட், மனோஜ் பரமஹம்சாவின் கேமிரா என அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களின் சிறப்பான பணியும் நெல்சனின் திரைக்கதை மற்றும் இயக்கமும் இந்த படம் நிச்சயம் சூப்பர்ஹிட் என்பதையே குறிக்கின்றது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments