தளபதி விஜய்யின் 'பீஸ்ட்': சன் பிக்சர்ஸ் வெளியிட்ட பூஜா ஹெக்டே வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய்யின் ’பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் நாயகியான பூஜா ஹெக்டேவின் வீடியோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.
தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகிவரும் ’பீஸ்ட்’ படத்தின் நாயகியான பூஜா ஹெக்டேவின் காட்சிகளின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்து விட்டதாகவும் இதை அடுத்து தான் விடை பெற்றுக் கொள்வதாகவும் பூஜா ஹெக்டே அந்த வீடியோவில் கூறியுள்ளார்
மேலும் ’பீஸ்ட்’ படத்தில் நடித்தது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாகவும் இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ரசித்து நடித்ததாகவும், இந்த படம் ரசிகர்கள் அனைவரையும் கவரும் வகையில் ஒரு சிறந்த படமாக இருக்கும் என்றும் நெல்சன் ஸ்டைல் மற்றும் விஜய் ஸ்டைல் இரண்டும் சேர்ந்து ஒரு நல்ல என்டர்டெயின்மென்ட் படமாக வந்திருப்பதாகவும் இருவருடன் இணைந்து பணி புரிந்தது தனக்கு மிகவும் பெருமைக்குரியதாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
It’s a wrap for @hegdepooja! Hear what she has to say about shooting for #Beast with #Thalapathy @actorvijay and director @Nelsondilpkumar pic.twitter.com/hz2mBhp7Do
— Sun Pictures (@sunpictures) December 10, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments