தளபதி விஜய்யின் 'பீஸ்ட்' முழுக்கதை இதுதான்!

தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம் வரும் 13ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டிரெய்லரில் இருந்து இந்த படத்தின் கதையை ஓரளவு ஊகிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் முழு கதை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையில் உள்ள பிஸியான இடத்தில் உள்ள மால் ஒன்றில் திடீரென சர்வதேச தீவிரவாத இயக்கம் ஒன்று உள்ளே புகுந்து அங்குள்ள பொதுமக்களை பணய கைதியாக வைத்து அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த பேச்சுவார்த்தையில் ஜெயிலில் இருக்கும் தங்களுடைய தலைவனை விடுவிக்க வேண்டும் என்றும் தீவிரவாதிகள் நிபந்தனை விதிக்கின்றனர்.

இந்த நிலையில் முன்னாள் ரா ஏஜெண்ட் அந்த மாலில் தற்செயலாக இருப்பதாக அரசுக்கு தகவல் கிடைத்ததை அடுத்து அவருக்கு தகவல் கூறி தீவிரவாதிகளை சுட்டுக்கொன்று பணயக்கைதிகளை காப்பாற்றும் டாஸ்க் கொடுக்கப்படுகிறது.

இந்நிலையில் திடீரென தீவிரவாதிகளின் தலைவனை விடுதலை செய்ய அரசு முடிவு செய்ததாக முன்னாள் ரா ஏஜெண்டுக்கு தகவல் தெரிய வந்ததை அடுத்து தீவிரவாதிகளை சரமாரியாக கொன்று பணயக்கைதிகளை காப்பாற்றுகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘பீஸ்ட்’ திரைப்படம் ஏப்ரல் 12ம் தேதி அமெரிக்காவில் வெளியாக உள்ள நிலையில் அமெரிக்காவில் உள்ள ஒரு திரையரங்கில் இந்த படத்தின் கதை முன்னோட்டத்தை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

12வது முறையாக விஷாலுடன் இணைந்த பிரபலம்: குவியும் வாழ்த்துக்கள்!

விஷால் நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் பிரபலம் ஒருவர் 12வது முறையாக இணைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து ரசிகர்களின் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது .

'ஆர்.ஆர்.ஆர்' வசூலை இந்திய பொருளாதாரத்துடன் ஒப்பிட்ட மத்திய அமைச்சர்!

பிரமாண்ட இயக்குனர் எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படத்தின் வசூலை இந்திய பொருளாதாரத்துடன் ஒப்பிட்டு மத்திய அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளது நாடு முழுவதும்

பிரபல நடிகையின் இன்ஸ்டாகிராம் ஹேக்: அதிர்ச்சியில் ரசிகர்கள்

பிரபல நடிகைகளின் டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் அவ்வப்போது ஹேக் செய்யப்பட்டு தவறாக பயன்படுத்தப்பட்டு வருவதாக வெளிவரும் தகவல்களை அவ்வப்போது

போதைப்பொருட்களுடன் உல்லாச பார்ட்டி: பிரபல நடிகரின் மகள் கைதா?

போதைப் பொருட்களுடன் உல்லாச பார்ட்டி நடத்தியதாக பிரபல நடிகரின் மகள், காவல்துறை அதிகாரியின் மகள், எம்பியின் மகன் உள்பட ஒரு சில முக்கிய பிரமுகர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம்

ஷூட்டிங் முடிஞ்சுருச்சுங்கிற தைரியமா? நெல்சனை மிரட்டிய விஜய்யின் சன் டிவி பேட்டி!

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' திரைப்படம் வரும் 13ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக