'வலிமை' படப்பிடிப்பு நடந்த அதே இடத்தில் 'பீஸ்ட்' படப்பிடிப்பு?

  • IndiaGlitz, [Friday,July 09 2021]

அஜித்தின் ’வலிமை’ படப்பிடிப்பு நடைபெற்ற அதே இடத்தில் விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள தனியார் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது என்றும் இந்த படப்பிடிப்பில் விஜய், பூஜா ஹெக்டே பாடல் காட்சியின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த பாடலுக்கு ஜானி மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றி வருகிறார் என்பதும், இவர் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான பாடலான ‘புட்டபொம்மா’ பாடலுக்கு பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது ‘பீஸ்ட்’ படத்தின் பாடல் காட்சியின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் இடத்தில் தான் ஏற்கனவே விஜய்யின் ’மெர்சல்’ கமல்ஹாசனின் ’இந்தியன் 2’ அஜித்தின் ’வலிமை’ ஆகிய படங்களின் படப்பிடிப்பு நடந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக ’வலிமை’ படத்தின் முக்கிய காட்சியான போலீஸ் ஸ்டேஷனில் நடைபெறும் ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்ட அதே இடத்தில் தான் தற்போது பீஸ்ட் பாடல் காட்சிக்கான செட் போடப்பட்டு டமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்னும் ஓரிரு நாளில் இந்த பாடலின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்றும் இதனை அடுத்து படக்குழுவினர் அடுத்த கட்டமாக மகாபலிபுரத்திற்கு செல்ல உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

More News

சென்னை திரும்பினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல் பரிசோதனை செய்து கொள்வதற்காக அமெரிக்கா சென்று இருந்த நிலையில் இன்று அதிகாலை அவர் சென்னை திரும்பியுள்ளார். 

ஜீவஜோதியின் வாழ்க்கை படமாகிறது...! அதுவும் பல மொழிகளில்....

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில், ஜீவஜோதியின் வாழ்க்கை படமாக உள்ளது. இந்த திரைப்படத்தை ஜங்க்லீ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

விண்ணை தாண்டியும் வரவேணாம், வீட்டை தாண்டியும் வரவேணாம்: சிம்புவின் 'தப்பு பண்ணிட்டேன்' பாடல்!

சிம்பு பாடிய 'தப்பு பண்ணிட்டேன்' என்ற பாடலின் டீசர் நேற்று வெளியான நிலையில் இன்று அந்த பாடல் வெளியாகும் என இந்த பாடலின் தயாரிப்பாளர் யுவன்சங்கர்ராஜா ஏற்கனவே அறிவித்திருந்தார்

டாக்டர் மகேந்திரனை அடுத்து திமுகவை இணைகிறாரா பத்மப்ரியா?

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த 2018ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார் என்பதும் அந்த கட்சி ஒரு பாராளுமன்ற தேர்தல் மற்றும் ஒரு சட்டசபை தேர்தலை சந்தித்து விட்டது என்பதும்

தமிழகத்தில் 45 நாட்களில் மருத்துவமனை....! "டீமேஜ்" நிறுவனம் உலக சாதனை படைத்தது எப்படி...?

புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வெறும் 45 நாட்களில் மருத்துவமனையை உருவாக்கியுள்ளது