அதற்குள் 'பீஸ்ட்' சிங்கிளா? துள்ளி குதிக்கும் விஜய் ரசிகர்கள்!

தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘பீஸ்ட்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் ஜார்ஜியாவில் நடைபெற்ற நிலையில் தற்போது சென்னையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விஜய் மற்றும் பூஜா ஹெக்டே பாடல் காட்சி படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாளை அடுத்து பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியானது என்பதும் இந்த போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் ஸ்தம்பிக்க வைக்கும் அளவுக்கு வைரலானது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ‘பீஸ்ட்’ படத்தின் பாடல் ஒலிப்பதிவு பணிகள் நடைபெற்று வரும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் பாடல் ஒலிப்பதிவு முடிந்து விட்டால் பர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக ஆகஸ்ட் 15ல் சிங்கிள் பாடல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘பீஸ்ட்’ படப்பிடிப்பு பர்ஸ்ட் லுக் வெளியாகி ஒரு மாதம் மட்டுமே ஆகியுள்ள நிலையில் அதற்குள் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் என ரசிகர்கள் துள்ளி குதித்து வருகின்றனர். ‘பீஸ்ட்’ சிங்கிள் பாடல் குறித்து படக்குழுவினர் அதிகாரபூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

பா.ரஞ்சித்தின் 'சார்பாட்டா' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவான பிரம்மாண்டமான திரைப்படம் 'சார்பாட்டா'. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் டப்பிங் பணிகள்

அமெரிக்காவில் ரஜினியை சந்தித்த பாஜக பிரபலத்தின் தாயார்: வைரல் புகைப்படம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனி விமானம் மூலம் அமெரிக்கா சென்றார் என்பதும் அமெரிக்காவில் உடல் பரிசோதனை செய்து கொண்டு அவர் இன்று அதிகாலை திரும்புவார்

"நவரசா" ஆந்தாலஜி....! சுவாரசியமான தலைப்பு மற்றும் நடிகர்களின் பட்டியல்....!

இந்த ஆந்தாலஜியில் பணியாற்றியுள்ள நடிகர்கள் மற்றும் குறும்படங்களின் தலைப்பு குறித்த சுவாரசியங்களை, இத்தொகுப்பில் பார்க்கலாம்.

தமிழகத்தில் திரையரங்குகள் திறப்பது எப்போது? முதல்வரை சந்தித்தபின் திருப்பூர் சுப்பிரமணியம் பேட்டி!

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை தமிழக திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் அவர்கள் இன்று சந்தித்த நிலையில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார்.

அஜித் பாணியில் நிவேதா பெத்துராஜ்: வைரல் புகைப்படங்கள்

'ஒரு நாள் கூத்து' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நிவேதா பெத்துராஜ் அதன்பிறகு 'டிக் டிக் டிக்' 'சங்கத்தமிழன்' உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்