'பீஸ்ட்' சிங்கிள் பாடல் ரிலீஸ் எப்போது? உற்சாகத்தில் தளபதி ரசிகர்கள்!

  • IndiaGlitz, [Saturday,July 17 2021]

தளபதி விஜய் நடித்துவரும் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது என்பதும், இந்த படப்பிடிப்பில் விஜய், பூஜா ஹெக்டே உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு இருக்கின்றனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ‘பீஸ்ட்’ படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் விஜய்யின் பிறந்த நாளன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து பர்ஸ்ட் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகும் என்று ஏற்கனவே தகவல் வெளி வந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி அனிருத் பிறந்த நாளான அக்டோபர் 16ஆம் தேதி இந்த படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தளபதி விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

மேலும் இந்த படத்தை அக்டோபர் மாத இறுதிக்குள் படப்பிடிப்பை முடித்துவிட சன் பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டு உள்ளதாகவும், அதனை அடுத்து போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் இந்த படத்தை பிரமாண்டமாக ரிலீஸ் செய்ய சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வரும் இந்தப் படத்தில் பிரபல மலையாள நடிகை அபர்ணா தாஸ் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். மேலும் யோகி பாபு, விடிவி கணேஷ் கணேஷ் உள்பட பலர் இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார்.