பான் இந்தியா திரைப்படமாகிறது 'பீஸ்ட்': எத்தனை மொழிகளில் ரிலீஸ் தெரியுமா?

தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்

இந்த நிலையில் இந்த படம் ஏற்கனவே தமிழ் தெலுங்கில் ரிலீஸாக உள்ளது உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது இந்த படம் 5 மொழிகளில் பான் - இந்திய திரைப்படமாக ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் இந்த படம் வெளியாக இருப்பதாகவும் தளபதி விஜய்யின் முதல் பான் - இந்திய திரைப்படம் இதுதான் என்றும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஏற்கனவே ‘பீஸ்ட்’ படத்துடன் வெளியாகும் ’கேஜிஎப் 2’ திரைப்படமும் ஒரு பான் - இந்தியா திரைப்படம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கையில் துப்பாக்கியுடன் கேங்க்ஸ்டராக சரண்யா பொன்வண்ணன்: அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து வரும் சரண்யா பொன்வண்ணன் ஒரு படத்தில் கேங்க்ஸ்டராக நடிக்கிறார் என்ற செய்தி ஏற்கனவே பார்த்தோம்

'ஹிருதயம்' தமிழ் ரீமேக் உரிமையை கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர்!

மலையாளத்தில் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற படத்தின் தமிழ் உள்பட 3 மொழிகளின் ரீமேக் உரிமையை பிரபல தயாரிப்பாளர் ஒருவர் பெற்றுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது .

பயில்வான் ரெங்கநாதன் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்: என்ன காரணம்?

நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

படப்பிடிப்பு தளத்தில் திருடி, மாட்டி கொண்ட சமந்தா: வைரல் வீடியோ

படப்பிடிப்பு தளத்தில் நடிகை சமந்தா திருடி, மாட்டிக் கொண்ட வீடியோவை அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தினமும் ஒரு வைல்ட் கார்ட்: இன்று வந்தவர் யார் தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 14 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் அதன் பின்னர் வைல்டு கார்டு